பக்கம்:இந்திர மோகனா.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

இந்திர மோஹனா

வந்தவர்:- ராமரை ஊருக்கு அழைத்தார்; அவர் வரா ததனால் அவர் பாதுகையை வாங்கிக்கொண்டுவந்து பூஜை செய்தார்.

விதூ:-அதுதான். அதுதான். விடாதேயும், விடாதே யும். இதுவும் அதைப்போல் ஒரு பெருமாள். நான் பரதன் மாதிரி.

வந்தவர்:-(கலகலவென்று சிரித்து, கட்டைக் காலை உற்று நோக்கி) ஹா ! இது என்ன பரிபவம்? இந்தக்காலை எப்போது பண்ணி ப்ரதிஷ்டை செய்தீர்? பேஷ் நன்றாயிருக் கிறது. இந்தக்கட்டை ராமர் திருவடிக்குச் சமமா?

விது:- ஒய்! நீர் தெரியாமல் பேசினால் பேசினால் எனக்குக் கோபம் வரும். இது என்ன லேசானதா ? ராமரும் ராஜகுமா ரர்; சாணக்கியனும் ராஜகுமாரர். பாதர் ராமர் பாதுகையைத் தானேவைத்துப் பூஜைசெய்தார். நான் இளவரசரின் காலையே வைத்துக்கொண்டு பூஜைசெய்கிறேனே, பரதரைவிட நான் அதிகமல்லவா? உம், ஜாக்கிரதை. இது மகாராஜாவாகப்போ கிறவருடைய கால். டேய்! நீங்க எல்லாரும் கும்பிடு

போடுங்கோ.

வேலையாட்கள் கும்பிடுகிறார்கள்.)

வந்தவர்.- ஓய்,நீர் சொல்வது வேடிக்கையாயிருக்கிறது. பரதன் பாதுகாபட்டாபிஷேகம் செய்தால், நீர் இப்படி யெல் லாம் செய்வதோ ? பேஷ், அதிருக்கட்டும். சாணக்கியனுக்கு மரக்கால் ஏது ?

விதூ :- ராமருக்குக் கைகேயி மரவுரிகொடுத்தாற்போல் சாணக்கியனுக்குச் சித்திராங்கிதேவி மரக்கட்டைக் கால் கொடுத்தார். நான் என்ன பொய் சொல்கிறேனா ? நம் இளவர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/99&oldid=1559566" இலிருந்து மீள்விக்கப்பட்டது