அறிஞர் அண்ணா
3
நேரத்தில் நின்றார்கள். அவர்களுடைய வெண்கலக்குரல் முதுமையின் காரணமாக இன்றையத்தினம் கொஞ்சம் தட்டுப்பட்டிருக்கின்றது. அவருடைய வீர உணர்ச்சி முதுமையின் காரணமாகக் குறைந்துவிடவுமில்லை; குலைந்து விடவுமில்லை.
“அவருடைய சொல்லையும், அந்த சொல்லோடு கலந்து வந்த வீர முழக்கத்தையும், வீரமுழக்கத்துக்குத் துணைநின்ற வீரப்பாடல்களையும் சென்னை நகரத்திலே எல்லா மூலைமுடுக்குகளிலேயும் கேட்டிருக்கிறார்கள்.
“என்ன மடமை, இந்த இராசகோபாலாச்சாரிக்கு” - என்று இந்த தெருக்கோடியிலே இவர்பாடல்களைக் கிளப்பினால் மறு தெருக்கோடியிலே உள்ளவர்கள் வருவார்கள். அப்பொழுதெல்லாம் ஒலிபெருக்கிகள் இல்லாத காலம்.
“ஒலிபெருக்கிகள் அபூர்வமாக வைக்கப்பட்ட காலத்தில், தெருத்தெருவாக அந்தக் கூட்டங்களை நடத்துவதற்கு அருணகிரி அடிகள் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்ட நேரத்தில், அவர்கள் ஒரு மடத்திலே மிக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த மடத்திலே அவர்களுக்கு ஒரு குறையுமில்லை. அவரை அண்டிப் பிழைப்பவர்களும், அவரை அடிவருடக் கூடியவர்களும், அவரை ‘அடிகளே’ என்று அன்புடன் அழைக்கக் கூடியவர்களும், அவருடைய மதவுரைகளைக் கேட்டு மகிழத் தக்கவர்களும், ஏராளமாக அந்த மடத்திலே இருந்தும், மடத்திற்கு வெளிப் புறத்திலே இருந்தும், தமிழுக்கு ஒரு ஊறு நேரிடுகிறது – தமிழ்மொழிக்கு இழுக்கு வருகின்றது என்று கேள்விப்பட்டவுடன் மடத்திலே இருக்கின்ற காரியத்தைப் பற்றியும் கவலைபடாமல் காவி உடையோடு, நம்மோடு கைகோர்த்துக்கொண்டு, தமிழகக்திலே இந்தி எதிர்ப்பு இயக்கத்தை மிகத் திறம்பட நடத்தியவர்கள் அருணகிரி அடிகள் ஆவார்கள். அவர்கள் இந்த மாநாட்டுக்குத் தலைமைவகிக்க வேண்டுமென்று நண்பர் நடராசன் மூலம் மெத்த விரும்பி வேண்டிக் கேட்டுக்கொண்டேன். இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டுமென்று நண்பர்கள்