பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இந்தி எதிர்ப்பு ஏன்?


விரும்பிய நேரத்தில், அதற்குத் தலைமைவகிப்பதற்கு யாரை அழைக்கலாம்; யாராவது தமிழ்ப்புலவரை அழைக்கலாமா? என்று முதலிலே எண்ணினோம்.

“அதற்குப் பிறகு தமிழ்ப்பெரும் புலவர்கள்; தமிழிலே தான் திறமை பெற்றிருக்கக் கூடுமே தவிர, தாய் திருநாட்டு விடுதலைக்கு ஏற்ற ஆற்றல் அவர்களுக்கிருந்தாலும், அவர்கள் ஈடுபட்டிருக்கும் அலுவல்கள் அவர்களுக்கு அச்சத்தையூட்டும் என்ற காரணத்தினாலே, அவர்களைத் தேடாமல் இருந்தோம். அப்படியானால், பெரிய அரசியல் தலைவர்கள், நம் இயக்கத்தோடு இரண்டறக் கலந்து இல்லாவிட்டாலும் கொஞ்சம் நெருங்கி வரக்கூடியவர்கள், ஓரத்திலே இருந்தாலும் நம்மிடத்திலே கொஞ்சம் உள்ளன்பு படைத்தவர்கள், அப்படிப்பட்டவர்கள் யாரையாவது அழைத்து தலைமை வகிக்கச் சொல்லலாமா என்று நண்பர்கள் என்னிடத்திலே சொன்னார்கள். எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது; அந்தப் பெயரை நண்பர்களிடத்திலே சொன்னேன். ‘நான் சொன்னதாக நீங்கள் போய் சுவாமி அருணகிரிநாதரை அழையுங்கள்; அவர்தான் இந்த நேரத்திற்குத் தலைமை வகிக்க மிகப் பொருத்தமானவர்’ என்று நான் சொன்னேன்.

“நான் அப்படிச் சொன்னதற்குக் காரணம் இந்தி எதிர்ப்பு மாநாடு இன்றையத்தினம் நாம் நடத்தினோம். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்தி மொழியின் இயலாத தன்மையினையும், தமிழின் தொன்மையினையும், அழகுற எடுத்துச் சொன்னார்கள். வேறு பல நண்பர்கள் இந்தி தமிழகத்திலே நுழைக்கப்பட்டால் நேருகிற பேராபத்தை எடுத்துச் சொன்னார்கள். இவைகளை மட்டும் அலசி ஆராய்ந்துவிட்டு இந்த மாநாடு முடிவடைந்துவிடப் போவதில்லை. இந்த மாநாடு பிரச்சினையை ஆராய்வதற்கு மட்டும் கூட்டப்பட்டதுமல்ல; இந்த மாநாடு தமிழ்மொழி சிலாக்கியமானது என்று எடுத்துச் சொல்லுவதுமல்ல. தமிழ் எவ்வளவு சிலாக்கியமானது என்பதைத் தமிழனிடத்திலே தமிழன் எடுத்துச்