6
இந்தி எதிர்ப்பு ஏன்?
என்று ஆவலுடன் சிலரும், ஆயாசத்துடன் பலரும் பொறாமையோடு சிலரும், பொச்சரிப்பாலே பலரும் கேட்கத்தக்க நல்ல நிலையிலேதான் தமிழ்மொழி இருக்கின்றது. ஆகையினாலே தமிழ் மொழிக்காக வாதாடுவதற்காக தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை. ஆனால் தமிழ்மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை நுழைக்கின்ற பேதமை, தமிழ்மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை ஆதிக்கமொழியாக்குகின்ற அக்கிரமம் இவைகளைக் கண்டித்து அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கின்றது. தமிழ்மொழியிலே அகத்திலே என்ன இருக்கின்றது? நிறத்திலே என்ன இருக்கின்றது? என்பதை நாவலர் நெடுஞ்செழியன் அருமையாக நமக்குச் சொல்லிவிடுவார். தமிழ்மொழியிலே பெயர்கள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டன? என்பதைக் கூற ‘ஊரும் பேரும்’ எழுதிய பேராசிரியர் சேதுப்பிள்ளை போதும். தமிழ்மொழியிலேயுள்ள இலக்கணச் செறிவுகள் என்னென்ன? இதற்கு சோமசுந்தர பாரதியார் ஒருவர் போதும். ஆனால், அவைகளுக்காக மட்டுமல்ல; இங்கே இந்த மாநாட்டிலே நாம் கூடியிருப்பது.
“இந்த மாநாட்டிலே எடுக்கின்ற முடிவினை, இந்த மாநாட்டிலே இந்தியை எதிர்த்தாக வேண்டும் என்று நாம் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானத்திற்கு உயிரூட்டம் தர வேண்டுமானால்,” நீங்களெல்லோரும் 1937-க்கு வருவதற்கு சித்தமாக இருக்கின்றீர்களா? “என்று கேட்பதற்கு மாநாடே தவிர, சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கல்ல; கம்பராமாயணத்தினுடைய சுவைகளை எடுத்துச் சொல்வதற்கல்ல; அகத்திலேயும், புறத்திலேயும் உள்ள அணிகளையும் அழகுகளையும் எடுத்து விளக்குவதற்கு அல்ல; அவைகளுக்குத் தமிழ்ப் பெரும் புலவர்கள் போதும்; வகுப்பறைகள் போதும்.”
“வெட்டவெளியிலே கொட்டகைபோட்டு வீதி தவறாமல் தோரணங்கள் கட்டி, சிற்றூர்களிலிருந்தெல்லாம் சிங்கநிகர்த்த காளைகள் சாரைசாரையாக வந்து இந்த மாமன்றத்தில் கூடி-