பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இந்தி எதிர்ப்பு ஏன்?


களா? பேசட்டும் பேசட்டும்; “ஆனால் எங்கள் ஆதிக்கம் நிறைவேறும்” என்று அங்கே உள்ளவர் சொல்லுகிறார்கள்.

“இங்கே நாம் ஆயிரமாயிரமாகக் கூடியிருக்கிறோம். நாம் வளர்ச்சியடைந்திருக்கிற இந்த நேரத்திலும் நம்மை உண்மையிலேயே அடக்கி ஆளவேண்டுமென்று கருதுகின்றவர்கள், ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் இருக்கின்ற திக்குநோக்கி நீங்கள் தமிழ்ப் பார்வையைக் காட்ட வேண்டும். தமிழ் பார்வையிலே குளிர்ச்சியும் உண்டு; கோபக்கனலும் உண்டு. தமிழன் தன்னுடைய நாட்டையே அர்ப்பணிப்பான், தோழன் என்று வருபவனுக்கு. தமிழன், தன்னுடைய தாளை மிதித்தவனை அவனுடைய தலை தாளிலே படுகின்ற வரை ஓயமாட்டான் என்பதை நம்முடைய இலக்கியங்களெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றன.

“எந்த இந்தி மொழியைத் தமிழகத்திலே இன்றையத்தினம் புகுத்த வேண்டும் – திணிக்க வேண்டும்” புகுத்தலாம் – திணிக்கலாம்; புகுத்தி விட்டோம் – திணித்து விட்டோம் – என்று எண்ணத்தக்க அளவுக்கு இன்றையத் தினம் வடக்கேயுள்ளவர்கள் இறுமாந்து இருக்கின்றார்களோ, அவர்களெல்லாம் காடுகளிலே சுற்றிக்கொண்டும், குகைகளிலே வாழ்ந்து கொண்டும் மொழியறியாத காரணத்தாலே வாழ்க்கை வழிதெரியாமல் வழுக்கி வீழ்ந்துகொண்டும் இருந்த நேரத்தில், இங்கே அகத்தையும் புறத்தையும் நம்முடைய பெரும் புலவர்கள் இயற்றினார்கள். முடியுடை மூவேந்தர்கள் இருந்த காலமும், அவர்கள் காலத்திலே இயற்றப்பட்ட பெரும் இலக்கியங்களும், அந்த நாளிலே வடநாட்டிலே வங்காளமானாலும் சரி, பாஞ்சாலமானாலும் சரி, பண்டித ஜவகர்லால் நேருவினுடைய தாயகமாகப் போற்றப்படுகின்ற காஷ்மீரம் ஆனாலும் சரி, நான் வடக்கே இருக்கின்ற வரலாற்று ஆசிரியர்களை கேட்கின்றேன் – அந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே உங்களுக்கு ஏது மொழி? உங்களுக்கு ஏது இலக்கணம்? உங்களுக்கு ஏது இலக்கியம்? உங்களுடைய மொழி எந்த