பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

23


“ஆகையினாலே அவசரப்பட்டு நீங்கள் முடிவெடுக்காதீர்கள்; ஆர அமர சிந்தித்துப்பாருங்கள் இந்திமொழியினுடைய ஆதிக்கத்தைத் தடுத்துத் தீர வேண்டுமென்றால் எடுக்கக்கூடிய அறப்போராட்டம் எந்த அளவுக்கெல்லாம் செல்லக்கூடுமென்பதை நாட்டிலே இன்றையத் தினம் நடைபெறுகின்ற நானாவிதமான காரியங்களைப் படித்துப் பாருங்கள்.

“ஜாதிச் சண்டை நடக்கின்றது. தெற்கே ஒரு மாவட்டத்தில் – இவ்வளவு வல்லமை பொருந்திய சர்க்காராலே அந்த ஜாதிச் சண்டையைத் தடுக்க முடியவில்லை தேசீய கீதம்பாடி இந்த சாதாரணச் சாதிச் சண்டையிலே இதுவரையிலே பத்திரிகைக் கணக்குபடி 40 பேருக்கு ஏறக்குறைய செத்திருக்கின்றார்கள்; கலகம் தொடர்ந்து நடைபெறுகிறதென்று படிக்கின்றோம், ஏன் இதை நான் சொல்லுகின்றேனென்றால், அப்படிப்பட்ட சில வேலைகளில் வெறித்தனத்தோடு தாக்கக் கூடியதான ஒரு காட்டுமிராண்டித்தனமான ஒரு முறை நாட்டிலே அமுலிலே இன்றையத்தினம் இருந்து வருகின்றது. இவர்களை எதிர்த்து ஒரு நல்ல அறப்போராட்டக் கிளர்ச்சியை நடத்துவதென்றால் எல்லாவிதமான தியாகங்களுக்கும் நாம் உட்பட்டிருக்க வேண்டும்.

“என்னுடைய நண்பர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பாடிய பாட்டில், கடைசி அடியை மறுபடியும் உங்களுக்கு நான் கவனப்படுத்துவேன். “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – நம்மை மாட்டநினைக்கும் சிறைச்சாலை” என்று அவர்கள் பாடினார்களே, 1937-ல் ஒவ்வொரு சிறைச்சாலையிலும், ஒவ்வொரு கம்பிக்குப் பின்னாலேயும் ஒவ்வொரு வார்டர்கள் காதிலேயும், ஒவ்வொரு சாதாரணக் கைதியினுடைய காதிலேயும் கேட்டுக் கொண்டிருந்த எழுச்சி மிக்கப் பாடல்தான் அது. அப்படிப்பட்ட விதத்திலே ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – நம்மை மாட்ட நினைக்கின்ற சிறைச்சாலை’யைப் பற்றி எண்ணத்தக்க உள்ளம் படைத்தால் மட்டும் போதாது. அப்பொழுதிருந்த ஆட்சியைவிட இப்பொழுதிருக்கிற ஆட்சியாளர்கள்