பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இந்தி எதிர்ப்பு ஏன்?


அடிப்பதற்கு அஞ்சமாட்டார்கள்; சுட்டுக்கொல்வதற்குத் தயங்கமாட்டார்கள்.

“நீங்கள் பத்திரிகை பார்த்தால் தெரியும் – துப்பாக்கிக் குண்டுபட்டு இறந்துவிட்டவர்களின் விசாரணையில், ஒரு அதிகாரி விசாரிக்கிறார், போலீஸ் அதிகாரியை, ‘ஆகாயத்தை நோக்கி சுடவில்லையா?’ என்று அதற்கு அந்த போலீஸ் அதிகாரி பதில் சொன்னது பத்திரிகையிலே இருக்கின்றது.

“இல்லை, நாங்கள் ஆகாயத்தை நோக்கிச் சுட வில்லை!”

“ஏன்”?

“எங்களுக்கு அப்படி உத்தரவு இல்லை”.

“உங்களுக்கு என்ன உத்தரவு”?

“சாகடிப்பதற்காகச் சுடு”" (Shoot to Kill)

“வெள்ளைக்காரன் காலத்தில் மிரட்டுவதற்காகச் சுடு” (Shoot to Care)

மேலே சுட்டால் வெற்றுத்தோட்டா வெடிக்கும், மக்கள் மிரண்டு ஓடுவார்கள், இவர்கள் காலத்திலே (Shoot to Kill) ‘கொல்வதற்காகச் சுடு’ என்பதுதான் எங்களுக்கு உத்தரவு என்றதாக பத்திரிகையிலே படித்தேன். போலீஸ் அதிகாரி சாட்சியமளித்திருக்கிறார். அப்படிப்பட்ட ஈவு இரக்கமற்ற நிலைமை நாட்டிலே இருக்கிற காரணத்தால், இந்தி எதிர்ப்பு இயக்கத்தை திறம்பட நடத்துகின்ற அறப்போராட்டம் உருவாகின்ற நேரத்தில் அருணகிரி அடிகள் அவர்களும், நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் மற்றும் பல நண்பர்களுடன் சேர்ந்து பேசி ஒரு நல்ல திட்டத்தைத் தீட்டுகின்ற நேரத்தில், நீங்கள் எதற்கும் தயாராக இருக்கக்கூடிய நல்ல உள்ளத்தைத் தாங்கி, ஒரு துளியும் பலாத்காரத்திலே நம்பிக்கை வைக்காமல், ஒரு துளியும் கடமையுணர்ச்சியிலே இருந்து தவறாமல், ஒரு துளியும் கண்ணியத்தைக் கெடுத்துக் கொள்ளா-