பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணா

26

மல் – கட்டுப்பாட்டை மீறாமல் இந்தப் போராட்டத்திலே ஈடுபடமுடியும் என்ற துணிவு இருக்கின்றவர்கள் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இடத்திலே நாளையத்தினம் முதற்கொண்டே பெயர்களைக் கொடுங்கள்.

“பட்டியல் வளரட்டும்; திட்டங்கள் வளரும். பட்டியல் வளர வளர வடநாட்டான் அந்தப்பட்டியலைப் படித்துப் பார்க்க பார்க்க ‘தி. மு. கழகம் இந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தைத் தலைமைதாங்கி நடத்தப்போகின்றது’ என்ற செய்தி கேள்விப்பட கேள்விப்பட, இந்தி எதிர்ப்பு இயக்கம் இதற்கு முன்னாலே என்னென்ன போராட்டம் நடத்திற்று என்பதையெல்லாம் படித்துப் பார்த்து ‘ஒரு நாள் ரயில் நிற்க வேண்டும்’ என்று சொன்னவுடனே, 5,000 தோழர்களுக்கு மேல் சிறைச்சாலைக்குச் சென்றார்கள்! என்ற நம்முடைய வீர வரலாற்றை – துப்பாக்கிக் குண்டைக்காட்டி அதோ போகிறான் கருணாநிதி, சுடு! – இதோ பார் கண்ணதாசன் அடி! என்று சொன்ன நேரத்திலேயும் கலங்காமல் நின்றவர்கள் நம்முடைய இயக்கத்திலே ‘ஏராளமாக’ இருக்கின்றார்கள் என்ற வரலாற்று உண்மையை அறிந்திருக்கின்றவர்கள் இந்தப் பட்டியல் வளர்ந்தால், நான் உங்களுக்குத் தெளிவாகச் சொல்லுவேன் – எவ்வளவு தான் வீரதீரமாக அவர்கள் பேசினாலும் கீழே இறங்கி வரத்தான் செய்வார்கள்.

“ஆகையினாலே நமக்குள்ளே அந்தக் கட்டுப்பாட்டுணர்ச்சி வளருவதற்கும், வீர உணர்ச்சியை நாம் பெறுவதற்கும் இன்றைய மாநாடு பயன்பட வேண்டுமென்பதற்காகத்தான் இந்தி எதிர்ப்பு மாநாட்டை இங்கே நண்பர்கள் கூட்டியிருக்கின்றார்கள்.

“மாநில மாநாட்டில் எடுத்த பல முடிவுகள், தொடர்ச்சியாக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றேம். அதிலேயும் இந்தியைப் பற்றி நாம் தீர்மானங்கள் நிறைவேற்றியிருககின்றோம். அந்த நேரத்திலே ஏற்படாத ஓர் சூழ்நிலை