பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இந்தி எதிர்ப்பு ஏன்?


இன்றையத்தினம் ஏற்பட்டிருக்கின்றது. அது என்ன சூழ்நிலையென்றால், கேர் என்ற ஒரு காங்கிரஸ் தலைவரை வைத்து வேறு பல காங்கிரஸ் தலைவர்களையும் அவருக்குத் துணையாக வைத்து இந்தி வேண்டுமா? வேண்டாமா? இந்தியை எப்படிப் புகுத்துவது 1960-க்குள்ளே இந்தியை எப்படித் திணிப்பதென் பதற்கு வழிவகை கண்டுபிடித்தார்கள். அந்த வழிவகை கண்டுபிடித்த – அவர்கள் வெளியிட்ட அந்த அறிக்கையை அந்தக் கமிட்டியிலேயே உறுப்பினராக இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்கள், ‘எனக்கு அது பிடித்தமில்லை’ என்று அவர்களே அந்த அறிக்கையில் குறிப்புத் தந்திருக்கின்றார்கள்; அவர் சொன்ன இரண்டு வாசகங்களை மட்டும் படிக்கின்றேன். டாக்டர் சுப்பராயன் என்பதற்காக மட்டுமல்ல; டாக்டர் சுப்பராயன் பெருத்த அறிவாளி – நல்ல அனுபவசாலி அவைகளுக்காக மட்டும் நான் படிக்கவில்லை. அவர் இன்றையத் தினமும் காங்கிரஸ் உறுப்பினராகத்தான் டில்லிப் பாராளு மன்றத்திலே இருக்கிறார்; அவர் கேர் கமிட்டி அறிக்கையைப் பற்றி தருகின்ற வாக்கியம்.

I fear that the entire report there is
very little evidence of understanding,
imagination and sympathy for the non-
Hindi speaking people of India.

“நான் கேர் அறிக்கையைப் படித்துப் பார்த்தேன், இந்தி பேசாத மக்களுடைய மனப்பான்மையை அறிந்துகொள்வதற்கு – அவர்களுடைய நோக்கத்தை அறிந்துகொள்வதற்கு – அவர்களுடைய எண்ணத்தைப் புரிந்து கொள்வதற்கில்லை” – என்று அதிலே குறிப்பிட்டிருக்கின்றார். இப்பொழுது நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தி மொழியை இங்கே புகுத்த

வேண்டுமென்றால், இந்தி மொழி யார் யார் பேசுகிறார்களோ அவர்களைக்கேட்டுப் பயனில்லை.