28
இந்தி எதிர்ப்பு ஏன்?
வீட்டுக்கு 3 அடுக்கு மாடி கட்ட வேண்டும் என்று நாம் தீர்மானித்தால் என்ன பொருள்?
திருவண்ணாமலையில் உள்ளவர்களல்லவா அவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? ஆனால் நாம் தீர்மானித்து திருவண்ணாமலைக்காரர்களைப் பார்த்து, ‘நாங்கள் இந்த மாநாட்டில் கூடிப்பேசினோம். வடக்கு வீதியை நீங்கள் தெற்குப் பக்கத்தில் திருப்புங்கள்’ தெற்கு வீதியிலே இருக்கின்ற குளத்தைத் தூர்த்துவிடுங்கள்; கிழக்குப் பக்கத்திலே இருக்கின்ற மாடி வீட்டுக் கட்டிடத்தை மண் குடிசையாக மாற்றுங்கள், இன்னொரு பக்கத்திலிருக்கின்ற மண் குடிசையை மாடி வீடாகக் கட்டுங்கள்’ என்று உத்தரவு போட்டால், என்னபொருள்? நாம் இங்கே இருக்கத்தக்கவர்கள் அல்ல; ‘சென்னையிலே கீழ்ப்பாக்கத்திலே இருக்கத்தக்கவர்கள்’ என்று பொருள்?
“அதே முறையிலே இந்தியாவுக்குச் சுதந்திரம் என்பதைப் பற்றிச் சட்டம் தீட்டப் போனவர்கள், ‘இந்தியாவுக்கு இந்திதான் தேசீய மொழி” என்று, அந்த இடத்திலே தீர்மானிப்பானேன்?
“வீட்டுக்குள்ளே களவாட வந்த கள்ளன், படுத்துத் தூங்குகின்ற பெண்ணைப் பார்த்து, ‘இந்தப் பெண்ணுக்கேற்ற புருஷன் அந்தத் தெருவிலே இருக்கிறான்; பார்த்து முடிப்போம்’ என்றா பேசுவான்? அவன் வந்தது திருட,” திருடிக் கொண்டுப் போவானா? படுத்துத் தூங்கிறப் பெண்ணைப் பார்த்து, ‘இவளுடைய முகம் செந்தாமரையைப் போலிருக்கிறது, இவளுக்கேற்ற மணவாளன் எங்கள் தெருவிலே இருக்கின்றான்; நான் பெண் பார்த்து வைக்கிறேன்’ என்றா சொல்லுவான்?
“அதைப்போல், உன்னிடத்திலே வெள்ளைக்காரன் கொடுத்த அந்த ஆட்சிப் பொறுப்பை ஒப்புக்கொண்டு, ‘நீ யார் யார் தலையைத் தடவலாம்; எந்தெந்த மக்களை மட்டந்தட்டலாம்: எந்தெந்த வியாபாரத்தை அழுத்திப் பிடிக்கலாம்;