32
இந்தி எதிர்ப்பு ஏன்?
அந்தக் கூரானக் கத்தி என்ன 150 - பேர் அவர்கள் சட்ட சபையில்: 15 பேர் எதிர்க்கட்சியினர் என்ற நிலைமை.’ அந்தக் கூரான கத்தி என்ன – மாட்டுப் பெட்டிக்கு நம்முடைய நாட்டு மக்கள். நிலைமைகள் இப்படியெல்லாம் வளருமென்பது பற்றி எண்ணிப் பார்க்காமல் கருத்தறியாமல் போட்டுவிட்ட ஒட்டு’. இவைகளெல்லாம் இன்றையத்தினம் கூரிய அந்த வாளைப்போல வடிவெடுத்து தமிழர்களுடைய எதிர்காலத்தைத் துண்டிக்கவும், துளைக்கவும் வந்து கொண்டிருக்கின்றன.
இவைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆற்றலையும் இன்றையத்தினம் பயன் படுத்த விரும்புகின்றது. அதற்கு நாட்டு மக்களுடைய பேராதரவைக் கேட்டுக் கொள்வதற்கும், திரட்டித் தருவதற்கும் இந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டை இங்கு கூட்டியிருக்கிறார்கள். இதிலே நாம் நிறைவேற்ற இருக்கின்ற தீர்மானத்தை உங்களிடையே நான் படிக்கின்றேன்.