பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர் அண்ணா

33


தீர்மானத்தின் கடைசி வாசகத்தைப் படித்து முடித்ததும் கர ஒலிகள் கிளம்பின.

உடனே அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசியதாவது:

நான் உங்களைத் “தயார்” என்று கூறச் சொல்லவில்லை தயாராயிருப்பவர்கள் யார் என்பதை என்னால் உண்மையிலேயே பார்த்துக்கொள்ள முடியும், நான் மக்கள் முகத்தை 20 ஆண்டு காலமாகப் பார்த்துக்கொண்டு வருகின்றேன். ‘பாவனை’ வீரமும் எனக்குத் தெரியும் – கொட்டகை உள்வரையிலே இருக்கின்ற வீரமும் எனக்குத் தெரியும் வெட்ட வெளியிலும் தங்கக் கூடிய வீரமும் எனக்குத் தெரியும்.

“ஆகையினால் நான், என்னுடைய மனதுக்குள்ளாகவே கணக்கெடுத்துக் கொள்கின்றேன். அந்தக் கணக்கு என்னைச் சோர்வடையச் செய்யவில்லை: உண்மையிலேயே மகிழ்ச்சியடையச் செய்கின்றது. தமிழ் நாட்டு மக்கள் தயாராகத்தான் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கும் அறிகுறியாக நீங்கள் இந்தத் தீர்மானத்தைக் கரகோஷத்தின் மூலம் நிறை வேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.”

(கைதட்டல்)


இதோ இன்னொரு தீர்மானம் படிக்கிறேன்.

மக்களின் கவனம் வேறு பக்கங்களில் ஈர்க்கப்பட்டிருந்த நேரத்தில் மக்களின் குறிக்கோளை எடுத்துக்காட்டத் தக்க முறையில் அல்லாமல், மக்களின் நேரடி வாக்குகளைப் பெறாமல், ஒரு கட்சியின் எதேச்சாதிகார முறையுடன் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் ஆதரவில் ஒரே ஒரு ஓட்டு மெஜாரிட்டியில், அவசர அவசரமாகவும், பொறுப் பற்ற முறையிலும் நிறைவேற்றப்பட்ட மொழி சம்பந்தமான விதி, மக்களின் உண்மையான குறிக்கோளைக் காட்டுவதாகாது என்பதாலும், அந்த விதி,