பக்கம்:இந்தி எதிர்ப்பு ஏன்?.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இந்தி எதிர்ப்பு ஏன்?


இந்தியல்லாத பிறமொழியாளர்களை அடிமைப்படுத்தப் பயன்படும் ஆதிக்கக் கருவியாக இருப்பது தெளிவாகத் தெரிந்துவிட்டபடியாலும், உடனடியாக அரசியல் சட்டத்திலிருந்து மொழி சம்பந்தப்பட்ட அந்த விதி அகற்றப்பட வேண்டுமென்று இந்த மாநாடு மத்திய அரசை வற்புறுத்துகிறது.

தீர்மானம் படித்தவுடன் பேசியதாவது:

“இன்றையத் தினம் காங்கிரஸ்காரர்கள் மெத்த சாதுக் களைப்போல நம்மிடத்திலே பேசும்பொழுது சொல்கிறார்கள் — ‘இந்தியை நாங்களா புகுத்துகிறோம்? அரசியல் சட்டத்திலேயே அது இருக்கிறது; அரசியல் சட்டத்தை நாங்கள் நிறைவேற்ற வேண்டுமே: அதற்காகத்தான் செய்கின்றோம்’ என்கிறார்கள்.

“அரசியல் சட்டத்தை எழுதிய நேரத்தில் நாம் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்பதை இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது. நாம் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல அதிலே பேசுவதற்குச் சென்றவர்கள், மக்களிடத்திலே ஓட்டு வாங்கிக் கொண்டு சென்றவர்கள் அல்ல: அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் சென்றார். எந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுச் சென்றார் அவர், அவருடைய அறிவு, அவருடைய செல்வாக்கு இவைகள் கலந்த தொகுதியியே தவிர, நீங்களும் நானும் இருக்கின்ற தொகுதியல்ல.

இப்படி, அவரவர் தாட்சண்யப்பட்டவர்கள் – அறிவினாலே தாட்சண்யப்பட்டவர்கள் — செல்வாக்கினாலே தாட்சண்யப்பட்டவர்கள் – நெடுங்காலமாகக் காங்கிரசுக்குப் பணம் கொடுத்ததனாலே தாட்சண்யப்பட்டவர்கள் – இப்படிப்பட்டவர்கள் நிறைவேற்றிய ஒரு தீர்மானம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்பது இந்தத் தீர்மானத்தினுடைய வாசகம்.