இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறிஞர் அண்ணா
37
காரணத்தினால், அவருக்கு ஒரு வேண்டுகோளையும் ஒரு தீர்மான ரூபத்தில் இதில் போடப்பட்டுள்ளது.
இந்தி ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகத் தக்க திட்டம் தீட்டி, நடவடிக்கைகளை வகுத்திட பொதுச் செயலாளரை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(தீர்மானம் படிக்கப்பட்டது.)
“நான் உங்களிடத்திலே பிரச்சினையை விளக்கிவிட்டேன் : நாட்டு நிலைமையை எடுத்துச் சொல்லிவிட்டேன்: போராட்டத்தின் அவசியத்தையும் சொல்லிவிட்டேன். அந்தப் போராட்டத்துக்குத் தக்க திட்டத்தைத் தீட்டித் தரக்கூடியவரை நீங்கள் இங்கே பார்க்கின்றீர்கள். அந்த நெடிய உருவம் தமிழ்ப் பண்பினுடைய உறைவிடம் தக்க திட்டத்தை நமக்குத் தீட்டித் தரும் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்; வணக்கம்.”