பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

19


பெண்ணுக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து அவளாற் கைவிடப்பட்டுப் பிறகு 'நீரு' எனப் பெயரிய ஒரு மகமதிய நெசவுகாரரால் இவர் எடுத்து வளர்க்கப்பட்டனரென மற்றொரு சாராருங் கூறுகின்றனர். இவருங், கடவுளை இராமன், அரி, கோவிந்தன், அல்லா என்னும் பெயர் களாற் பாடி வழுத்தினர். ஆனாலுங், கடவுள் பல பிறவிகள் (அவதாரங்கள்) எடுத்தா ரெனக் கூறுவது அடாதென்றும், இறைவனைக் கல் செம்பு கட்டை வடிவில் வைத்து வணங்குதல் பெருங்குற்றமாகு மென்றும், இந்து சமயக் கிரியைகளுஞ் சடங்குகளும் பொருளற்ற புன்செயல்களாகு மென்றும் இவர் தம்முடைய பாடல் களில் மிகவுங் கடுமையாக மறுத்துப் பாடியிருக்கின்றார். இந்தி மொழியின் ஒரு பிரிவான 'அவதி' மொழியில் இவருடைய பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. இந்தியின் மற்றொரு பிரிவான 'மைதிலி' மொழியைக் கற்பவர்கள், 'அவதி' மொழியில் இருக்குங் கபீர் தாசரின் பாடல்களை எளிதிலே அறிந்து கொள்ளல் இயலாது. தாம் இயற்றிய * விப்ரம தீசி' என்னுஞ் செய்யுள் நூலிற் கபீர் தாசர் பார்ப் பனருடைய கொள்கைகளை மிகு கடுமையுடன் தாக்கி மறுத்திருக்கின்றார். கபீர்தாசர் இந்திமொழியில் இயற்றிய செய்யுள் நூல்கள் பற்பல. இவர் இறந்தபின், இவர் தம் மாணாக்கர் இயற்றிய நூல்களும் இவரது பெயரால் வழங்கப்படுகின்றன. கபீர்தாசருடைய பாடல்கள் இந்தி மொழியில் உண்டான பிறகு தான், அஃதாவது சென்ற நானூறு ஆண்டுகளாகத் தாம் இந்தி மொழியின் ஒரு பிரிவுக்கு ஓர் ஏற்றமுண்டாயிற்று. இனிக், கபீர் தாசருக்குப் பின், அவர் தம் மாணாக் கரான 'நானாக்' என்பவர் 'சிக்கிய மதத்தைப்' பஞ்சாபு தேயத்தில் உண்டாக்கினர். இவருடைய பாடல்கள், பஞ்சாபியும் இந்தியுங் கலந்த ஒரு கலப்பு மொழியிற் பாடப்பட்டிருத்தலால், இந்தியைப் பயிலும் நம் நாட்டவர் இவருடைய பாடல்களையும் எளிதிலே அறிந்துகொள்ளல் இயலாது.