பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

31


கன்னச பணிக்கர்' என்பவரேயாவர் ; இவர் இற்றைக்கு 587 ஆண்டுகளுக்கு முன், அஃதாவது கி. பி. 1350ஆம் ஆண்டில் இருந்தவர். இவர் இயற்றிய இராமாயண மொழி பெயர்ப்பில், வடசொற்கள் சிற்சில மிக அருகி ஆங்காங்குக் காணப்படுகின்றன. இவர்க்குப் பின் மலையாள மொழியில் நூல் இயற்றினவர் கி. பி. 1550 ஆம் ஆண்டில் இருந்த 'செருச்சேரி நம்பூரி' என்பவரே யாவர். இவர் பார்ப்பனச் சாதியினரா யிருந்தும், இவர் தாம் இயற்றிய 'கிருஷ்ணகதா' என்னும் நூலைப் பெரும் பாலும் வடசொற் கலவாத் தனி மலையாள மொழியில் ஆக்கியிருப்பது மிகவும் பாராட்டற்பால தாய் இருக் கின்றது. இவர்க்குப் பின் கி. பி. 1650 ஆம் ஆண்டி லிருந்த 'எழுத்தச்சன்' என்பாரோ வடமொழி யிலிருந்து தாம் மொழி பெயர்த்தியற்றிய 'மாபாரதத்' திலும் வேறு சில புராணங்களிலுந் தொகுதி தொகுதியாக வட சொற்கள் சொற்றொடர்களை அளவின்றிப் புகுத்தி மலையாள மொழியைப் பாழாக்கினவராவர். ஈண்டுக் காட்டியவாற்றால், மலையாள மொழி வடமொழிக் கலப்பால் தமிழின் வேறாய்ப் பிரிந்து வேறொரு மொழிபோல் வழங்க லானது இற்றைக்குச் சிறிதேறக்குறைய முந்நூறாண்டு களாகத் தாம் என்பது தெற்றென விளங்கா நிற்கும். என்றிதுகாறும் எடுத்து விளக்கியவாற்றால், இப் போது இவ்விந்திய தேயத்தின் வடக்கே வழங்கும் 'உருது', 'இந்தி', 'வங்காளி' முதலான மொழிகளிலும், மேற்கே வழங்கும் 'மராட்டி', 'குஜராத்தி' முதலான மொழிகளிலுங், கிழக்கே தெற்கே நடுவே வழங்குந் "தெலுங்கு', 'தமிழ்' 'கன்னடம்', 'மலையாளம்' முதலான மொழிகளிலுந், தமிழைத் தவிர, மற்றைய வெல்லாம் பழையன அல்லவாய், ஆயிர ஆண்டுகளுக்குள்ளாகவே தோன்றித், தமக்கெனச் சிறந்த இலக்கண இலக்கிய நூல்கள் இல்லாமற், சமஸ்கிருதத்திலுள்ள மாபாரதம் இராமாயணம் பாகவதம் முதலான கட்டுக்கதை நூல்களை மொழிபெயர்த் துரைப்பனவாய்த் தாமே தனித்தியங்க