பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

'இந்தி' பொது மொழியா?


மூன்று தீவுகளில் உறைபவர் ஆவர். இவர்களின் தொகை சிறிதேறக்குறைய நாலேகாற் கோடியாகும். இங்ஙனம் நாலேகாற்கோடி மக்கட்குரிய ஆங்கிலமொழி யானது இப்போது இந்நிலவுலக மெங்கும் பதின்மூன் றரைக்கோடி மக்களாற் பேசப்பட்டு வருகின்றது. முன்னொரு காலத்தில் ஏழுகோடி மக்களாற் பேசப்பட்டு வந்த தமிழ்மொழி இப்போது இரண்டுகோடிக்குங் குறைவான மாந்தர் கூட்டத்தாற் பேசப்பட்டு வரு கின்றது. இவ்வாறாகத் தமிழ்மொழி பேசுவோர் தொகை பத்தாயிர ஆண்டுகளாக வரவரச் சுருங்கி வருதலையும், ஆங்கிலமொழி பேசுவார் தொகை இரு நூற்றாண்டுகளுக் குள்ளாக உலகம் எங்கணும் அளவின்றிப் பெருகிவருதலை யும் உற்றுணர்ந்து நோக்குங்கால், தமிழ்மொழி சுருங்கு தற்குக் காரணந் தமிழரிற் கல்வியறிவுடையவருங் கல்வி முயற்சியுடையவரும் வரவரக் குறைந்து போதலும், ஆங்கிலமொழி பெருகுதற்குக் காரணம் ஆங்கிலரிற் கல்வி யறிவுடையவரும் கல்வி முயற்சி யுடையவரும் நாளுக்கு நாள் மிகுந்து ஓங்குதலுமே யென்பது தெற்றென விளங்கு கின்றது. இனி, அங்ஙனந் தமிழரிற் கற்றார் தொகை அருகுத லும் ஆங்கிலரில் அவர் தொகை பெருகு தலுந்தாம் எதனா லெனின், தமிழரிற் செல்வம் உடையவர்களெல்லாரும் இஞ்ஞான்று தமிழ்க் கல்வியறிவில்லா தவர்களாய் விட்டார்கள் ; அதனால் அவர் தந் தாய்மொழியாகிய தமிழின் அருபெருஞ் சிறப்பும், அதனைக் கற்பதனால் மக்கள் அடையும் இம்மை மறுமைப் பெரும்பயன்களும் ஒரு சிறிதும் உணராதவராய் இருக்கின்றனர் ; அதனால் அவர், தம்மைப்போலவே தமது நாட்டிற் பிறந்தவர்க ளெல்லாருஞ் செல்வ வாழ்க்கையிற் சிறந்து வாழல் வேண்டு மென்னும் உயர்ந்த நோக்கமுந் தினைத்தனையும் இல்லா தவராய் இருக்கின்றனர்! அதுமட்டுமோ! ஏழை எளிய மக்கள் நாள் முழுதும் வெயிலிற் காய்ந்தும் மழை -யில் நனைந்தும் அரும்பாடுபட்டு உழவுத் தொழிலைச்