பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

35


செய்தும் பல்வகைக் கைத்தொழில்களைப் புரிந்தும் பெரு வருவாயினையும் நுகர்ச்சிப்பொருள்களையும் விளைத்துக் கொடுக்கச், செல்வராகிய தாம் உடல் வருந்தாமல் மூளை யுழைப்பில்லாமற் சிறந்த இல்லங்களிற் செருக்குட னிருந்து விலாப்புடைக்க உடல் கொழுக்கத் தின்று பஞ்சணைமேற் றுயின்று பல்வகை சிற்றின்பங்களை நுகர்ந்துந், தம்மை இங்ஙனம் இன்ப வாழ்க்கையில் வைத்துள்ள அவ்வேழை யெளியவர்களின் உடல் நல மன நலங்களைச் சிறிதேனும் நன்றியுடன் கருதிப்பார்க் கின்றார்களா? இல்லை, இல்லை. அவ்வேழை மக்கட்கு இப்பாழுஞ் செல்வர்கள் அரைவயிற்றுக் கஞ்சிதானும் வார்ப்பதில்லை! அரையிலுடுக்க நான்கு முழத் துண்டு தானுங் கொடுப்பதில்லை! வெயிலுக்கும் மழைக்கும் நச் சுயிர்களுக்கும் ஒதுங்கி இனிது உறைய நல்ல ஒரு சிறு இல்லந்தானும் அமைத்துத் தருவதில்லை! இத்துன்ப நிலையில் அவர்கள் நோய்கொண்டு வருந்தினால் அது தீர்ப்பதற்கு மருந்தினு தவியுஞ் செய்வதில்லை! அவர் அவ் விடும்பையிற் பெற்ற ஏழைப் பிள்ளைகட்கு உணவோ உடையோ கல்வியோ சிறிதும் ஈவதேயில்லை! அவர்களை அவர் கண்ணேறெடுத்துப் பார்ப்பதுமில்லை! இவை மட்டுமோ! இவ்வேழைக் குடியானவர் தம் வயிற்றுக் கில்லாமையினாலோ உடல்வலி குன்றினமையினாலோ நோயினாலோ, சிற்சில நாட்களில், இச்செல்வரின் வயல் களிலும் புழக்கடைகளிலும் மாட்டுக்கொட்டில்களிலும் அவர் ஏவிய பணி செய்யத் தவறினால், அவர்களை மரத் துடன் சேர்த்துப் பிணித்து, அவரது முதுகில் இரத்தஞ் சொட்டச் சொட்டப் புளிய வளாரினாற் சிறிதும் நெஞ் சிரக்கமின்றி அடித்துக்கொல்கின்றார்கள் ! இங்ஙனந் தமிழ்ச் செல்வர்கள் தங்கீழ் வாழ்வாரை ஓவாது துன்புறுத்து வருகையில், நந்தமிழ்மக்கள் உடல் நல மன நலங்கள் வாய்ந்து தமிழ்க் கல்வியிற் சிறப்பதெங்ஙனம்? இனி, தங்கீழ் வாழும் பெருந்தொகையினரான ஏழைத் தமிழ் மக்களை அங்ஙனம் மேலேறவொட்டாமல்