பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தி' பொது மொழியா?

39


யாகிய ஆங்கிலத்தைப் பரவவைத்தற்கு இத்துணைப் பெருமுயற்சியும் இத்துணைப் பெரும் பொருட்செலவுஞ் செய்து வருகின்றன ரென்றால், தமது தாய் நாடாகிய பிரித்தானியாவிலுந், தம்மவர் குடியேறி வைகும் வட அமெரிக்கா தென்னமெரிக்கா ஆத்திரேலியா தென் னாப்பிரிக்கா முதலான பெரும் பெரு நிலப் பகுதிகளிலு மெல்லாம் அவர்கள் இன்னும் எத்துணை முயற்சியும் எத்துணை கோடிக்கணக்கான பொன்னுஞ் செலவு செய்து தமது ஆங்கில மொழியைப் பரவச் செய்பவராதல் வேண்டும்! ஆதனாலே தான் இவ்வுலக மெங்கணும் ஆங்கிலமொழி திருத்தமாகப் பயிலவும் பேசவும் எழுதவும் பட்டு வருகின்றது. ஆங்கிலம் நன்கு பயின்று அதில் நூல் எழுதும் ஆசிரியர் தொகையும் அவர் எழுதிய நூற்றொகையுமே கணக்கெடுத்தல் இயலாதென்றால், ஆங்கிலப் பயிற்சி மட்டுஞ் செய்வார் தொகையைக் கணக் கெடுத்தல் இயலுமோ! இவ்வியல்பினை உற்றுநோக் குங்கால், ஆங்கிலத்தின் முன் வேறெந்த மொழியுந் தலை தூக்கி நில்லாதென்பது தேற்றமேயாம். ஆங்கிலமே பொதுமொழியாதற் குரித்து இங்ஙனம் இவ்விந்திய தேயத்தின் மட்டுமேயன்றி இவ்வுலகம் எங்கணும் அழுந்திப் பயிலவும், பேசவும் வழங்கவும் பட்டுவரும் ஆங்கிலமொழி யொன்றே உலக முழுமைக்கும் பொதுமொழியாய்ப் பரவிவருதலால், அது தன்னையே நம் இந்துமக்கள் அனைவரும் பொதுமொழி யாய்க் கைக்கொண்டு பயிலுதலும் வழங்குதலுமே அவர் கட்கு எல்லா வகையான நலங்களையுந் தருவனவாகும். முதலில் உலகியல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் கடைக்கூட்டு தற்கு எத்தொழிலைச் செய்வதா யிருந்தாலும், அத்தொழில் நுட்பங்களை நன்கறிந்து செய்தற்கு தவி செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழி லறிவு நூல்கள் ஆங்கில மொழியிலன்றி வேறெதிலேனும் இருக்கின்றனவா? பல்வகைக் கைத்தொழில்களைப்