பக்கம்:இந்து தேசியம்.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-தொ.பரமசிவன் 9


In Turkish : Chore (திருடன்), Raahzan (வழிப்பறிக்காரன்) lutera (Looter)- கொள்ளைக்காரன்)

In Persian : Ghulam (அடிமை) barda (Obedient servant கீழ்ப்படிதலுள்ள ஊழியன்) sia faaon (கருப்பு வண்ணம்) kaalaa (கருப்பு)

அதேபோலவே பாரசீகர்களால் '' என்ற எழுத்தை உச்சரிக்க முடியாமல் '' என உச்சரித்ததால் சிந்து - இந்துவாகி விட்டது என்பது தவறான விளக்கமாகவே படுகிறது.


ஒரு வேளை இந்தியாவுக்குள் நுழைந்து வளமான நிலங்களையும், சமூகத்தில் உயர்வான இடத்தையும் பிடித்துக் கொண்டதன் பின் (அவமானகரமான இப்பொருள்களைக் கூறி கேவலப்படாமல் இருக்க) புதிய குடியேறிகள் இவ்விளக்கத்தை தொடங்கி வைத்திருக்கலாம்; பரவச் செய்திருக்கலாம். ஏனெனில் ஷியா முஸ்லிம் பிரிவினரான பாரசீகர்களுக்கு ஷியா, சன்னி, ஷரியத் போன்ற உச்சரிப்பு கொண்ட சொற்கள் புதியவையல்ல.
மேலும் பஞ்சாபி மொழியில் பாரசீக சொல்லின் கொண்டதாக கூறப்படும் பல சொற்கள் ச. ஷ என்ற ஒலியைக் கொண்டுள்ளன.
சர்தார், Sardar, Seidar, Sirdar ( Leader) ஷாகித், Shaheed (Mar- tyr) ஷேய்ர் Shair (Lion) ஷாயெர் Shayer (Poet) ஷியா Siah (Black) போன்ற பலவற்றைக் கூறலாம்.
மேலும் பஞ்சாப் என்ற சொல்லே Panch (Five) aab (Water) ஐந்து நீர் என ஐந்து ஆறு என' பாரசீக சொற்களின் அடிப்படையில் அமைந்ததாக மொழியியல் அறிஞர்கள் நிறுவியுள்ளனர் அடுத்து, இந்துகுஷ் மலைகளுக்கு பாரசீக மொழியில் (Hindu Kill- ers) இந்துக்களை கொல்லும் மலை என்ற பெயர் வந்த வகை பற்றி கூறப்படும் செய்தியைப் பார்ப்போம்.
இந்தியா முழுவதும் கருப்பு நிற மக்கள் பரவி வாழ்ந்த நாடாகவே காகாசியர்கள் (Caucasrians) (ஆரியர்) வருகைக்கு முன்னர் விளங்கியது. சிந்து வெளியில் வாழ்ந்த அம்மக்களை வடமேற்கே பரவ விடாமல், செல்ல விடாமல் தடுத்தவை அந்த மலைத் தொடர்களே ஆகும். செங்குத்தான, பனி பொழியும் அம்மலையைக் கடக்க முயன்ற போதெல்லாம் அன்றைய இந்திய (கருப்பு நிற) மக்கள் இறந்து போயுள்ளனர். ஒரு முறை பெரும் எண்ணிக்கையிலான இந்திய (கருப்பு) மக்கள் அம்மலையின் பெரும்பனிப் பொழிவில் இறந்துபோன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/10&oldid=1672741" இலிருந்து மீள்விக்கப்பட்டது