________________
தொ.பரமசிவன் 101 J (ஆதாரம், நமது குறிக்கோள்) இரஷ்யப் பயணத்திற்குப் பின் அவரது கருத்துக்களை மேலும் செழுமைப்படுத்திக் பொதுவுடைமைக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அறிக்கையைத் (Communist manifesto) தமிழில் வெளியிட்டவர் பெரியாரே. 1933-இல் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளான (பிற்காலத்தியேகர் எனப் புகழப்பட்ட) ஜெயப்பிரகாஷ் நாராயணனும். (பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவரான) பி.ராமமூர்த்தியும் ஈரோட்டுக்கு வந்து பெரியாரைச் சந்தித்து மீண்டும் காங்கிரசுக்கு வருமாறு அழைக்கின்றனர். காங்கிரசு கட்சியைக் காந்தியத்திலிருந்து மீட்டு சோசலிஸ்டுகள் கைப்பற்றி விடலாம் என்பதே அவர்களது திட்டம். 'அது இயலாத செயல்' என்று கூறிப் பெரியார் அவர்களின் அழைப்புக்கு இணங்க மறுத்து விட்டார். பெரியாரின் முடிவே சரியானது என்று காலம் காட்டியது. பெரியார் சொன்னது போலவே நாடு விடுதலை அடைந்ததும் அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரசில் (AITUC) கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் பெருகி இருந்ததைக் கண்ட, சர்தார் படேல் அதை உடைத்து இந்திய தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (INTUC) என்ற ஒன்றைத் தொடங்கினார். ஆக மொத்தத்தில் சோசலிஸ்டுகள் ஏமாந்தனர். காங்கிரசார் வெற்றி பெற்றனர். 1937-இல் ராஜாஜி முதலமைச்சரானவுடன் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார், அதை எதிர்த்துப் பெரியார் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் பரவலாகப் பொதுமக்கள் ஆதரவைப் பெற்றது. இறுதியாக கட்டாய இந்திக்குரிய அரசாணையை ராஜாஜி திரும்பப் பெற்றார், பெரியார் தாம் நடத்திய இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏழு தளபதிகளை நியமித்தார். அவர்களில் ஒருவர் பார்ப்பனர். மற்றொருவர் பெண் ஆவர். தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் சிறை சென்ற போராட்டம் இதுவேயாகும். 1944-இல் சேலத்தில் நீதிக்கட்சியை அண்ணாவின் துணையோடு பெரியார், திராவிடர் கழகமாக மாற்றினார். நீதிக் கட்சித் தலைவர்களான கி.ஆ.பெ.விசுவநாதம், சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பெரியாரிடமிருந்து பிரிந்து சென்றனர். அவர்கள் அக்காலக்கட்டத்தில் சென்னை வந்த டாக்டர் அம்பேத்காருக்கு ஒரு வரவேற்பு அளித்தனர். பெரியாருடன் ஒத்துப் போகுமாறு அம்பேத்கார் அவர்களைக் கடிந்துரைத்தார். அதன் பின்னர் பெரியார் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை முன் வைத்துச் செயலாற்றினார்.