பக்கம்:இந்து தேசியம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.பரமசிவன் 109 பார்ப்பனரல்லாதாரின் சமூக உளவியல் தடையாகவும் பார்ப்பனியம் ஒரு உளவியல் தடையாக மாறி விடுகிறது. ஒட்டு மொத்தமாக வளர்ந்திருக்கிறது. இனி மேற்குறித்த கருத்துக்களை விரிவாகக் காண்போம். நண்பர்கள் மற்றொரு தனி நபரைப் பாராட்டும் போதும் இகழும்போதும் அவரது சாதியையும் சேர்த்துப் பேசுவது சாதாரணமாக உரையாடல்களில் நாம் காணுவதாகும். சாதிப் புத்தி என்ற தொடரைப் பயன்படுத்தும் இவ்வகையான பேச்சுக்களில் 'சாதிப் புத்தி' என்பதனை நாம் நண்பர்கள் 'பிறவிப் புத்தி' என்றே கொள்கிறார்கள். இந்த மேல் தட்டு மனோபாவம் பார்ப்பனியக் கூறுதான். மலம் அள்ளும் கவுண்டரைக் கண்டதுண்டா? வன்னியரைக் கண்டதுண்டா? செட்டியாரைக் கண்டதுண்டா? என்பது போன்ற கேள்விகளை முற்போக்குப் பார்ப்பனர்கள் நயவஞ் சகமாகக் கேட்கிறார்கள். இங்கு ஒரு செட்டியாரோ. வன்னியரோ, கவுண்டரோ, சக்கிலியரோ, பள்ளரோ தங்கள் சாதித் தொழிலை மட்டுமே செய்கிறார்கள் என்பது அச்சாதியின் வெற்றியல்ல. அது வருணாசிரமத்தின் வெற்றியாகும். ஒவ்வொரு சாதிப்பிரிவும் இந்தத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என ஏற்பாடு செய்து வைத்த பார்ப்பனியக் கருத்தாக்கத்தின் (வருணாசிரம முறையின்) தாக்கம் இன்னும் வலிமையோடு உள்ளது என்பதுதான் உண்மையான பொருளாகும். ஆயினும், இன்றையப் பொருளாதாரச்சூழலில்பார்ப்பனரல்லாதார் அதிகம் பாதிக்கப்பட்டு வேறு சில தொழில்களில் ஈடுபடுகின்றனர். இன்று செருப்புத் தயாரித்தல், முடி திருத்தல், அனைத்து வகையான விவசாயத் தொழில்கள், கல்லுடைத்தல், பாரவண்டி இழுத்தல் போன்ற வேலைகளைச் சாதி வேறுபாடில்லாமல் பார்ப்பனரல்லாதார் பார்க்கக் கூடிய நிலை உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் பெரும்பகுதி மக்களின் தொழிலாகிய விவசாயத்தில் கூடப் பார்ப்பனர்கள் இன்னும் ஈடுபடவில்லை. அப்படிப்பட்ட நெருக்கடி அவர்களுக்கு ஏற்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு சாதிக்கும் வரையறுக்கப்பட்ட சாதி ஆச்சாரத்தைப் பார்ப்பனியம் நம்மீது திணித்து வைத்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியார் மட்டுமே பசு, பன்றி இவற்றின் மாமிசத்தை உண்ணும் வழக்கம் இருந்தது. இன்று இராணுவத்திலும் நட்சத்திர உணவு விடுதிகளிலும் அனைத்துச் சாதியாரும் இவற்றை உண்ணுகிறார்கள். இருப்பினும் பொது இடங்களிலும் இவ்வகை இறைச்சி மட்டும் அல்லாமல் பிறவகை ஆடு, கோழி இறைச்சிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/110&oldid=1669797" இலிருந்து மீள்விக்கப்பட்டது