பக்கம்:இந்து தேசியம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

110 'இந்து' தேசியம் தவிர்க்கப்பட்டு மரக்கறி (சைவ) உணவும், மிகப் பெரிய சைவ உணவு விடுதிகளும் மேட்டிமையின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. விதவை மறுமணமும் ‘மணமுறிவும், மறுமணமும், தமிழ்நாட்டு மக்கள் தொகையில் குறைந்தது 60% மக்களால் நேற்று வரை கைக்கொள்ளப்பட்டு வந்தன. இவை பெண் உரிமையின் அடையாளங்களாகும். தன்னுடைய குடும்பத்தில் இவை நடைபெறுவது என்கிற மனப்போக்கு ‘நாகரிகக் குறைவு' அல்லது 'கேவலம்' இப்பொழுது பார்ப்பனரல்லாதோரிடையே பெருகி வருகிறது. இவ்வகை உணர்வுடைய நண்பர்களை நாம், 'பார்ப்பனியத்திற்குப் பலியா போனவர்கள்' என்று கொள்ளுதல் வேண்டும். சாதிக்குரிய நல்ல மரபுகளை மறைத்துக் கொள்வது என்று நாம் இதனைத்தான் குறிப்பிடுகின்றோம். மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கணிப்பொறி ஆகிய தொழிற்கல்லூரி படிப்புகளின் மீது பார்ப்பனரல்லாத நடுத்தர வர்க்கம் வெறிக்கொண்டு அலைகிறது. இதற்கான போலித்தனமான மனப்பாடக் கல்வியைத் தங்கள் பிள்ளைகளின் மீது திணித்துக் கொடுமைப்படுத்துகிறார்கள். இந்தக் கல்வியின் மீது இவர்களுக்கு என்ன இப்படித் திடீர்க் கவர்ச்சி? மிகப் பெரிய பணக்காரன் கூட இந்தப் படிப்பினை நாடிப் போவது ஏன்? இந்தத் தொழில்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் கருப்புப் பணத்தின் ஊற்றாகவும், அதன் மூலம் அதிகார மையங்களை நெருங்குவதற்கும் வாயிலாகவும் அமைந்து விடுகிறது. அதாவது மாதம் இரண்டு இலட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வியாபாரியை விட மாதம் ரூ.20,000/- சம்பாதிக்கும் டாக்டர் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரையோ, அமைச்சரையோ மையங்களாகிய அதிகார எளிதில் சந்திக்க முடியும். அமெரிக்காவிலோ ஜப்பானிலோ எளிதில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். இப்போதுள்ள தொழிற்கல்விப் படிப்பின் மீதான போலிக் கவர்ச்சி கருப்புப் பணத்தின் மீதான கவர்ச்சி. இது பொது நல உணர்வோடு பிறந்ததல்ல. உள்நாட்டுத் தொழில் நுட்பத்தோடு இந்தக் கல்வி முறை மாற்றம் பெறும் வரை இது எளிய மக்களுக்குப் பயன்படாது. இருப்பினும் பார்ப்பனர்களுக்கு மாற்றாக இந்தத் துறையில் பார்ப்பனரல்லாதார் நுழைகிறார்கள் என்பதில் மட்டுமே நாம் நிறைவு கொள்ளலாம். உலக நேரடியாக அரசு அதிகாரப் பதவிகளை அடைவதில் சிலர் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். குறிப்பாக காவல்துறை, வனத்துறை, சோதனைப் பணிப்பிரிவுகள் ஆகிய துறைகளில் பணி செய்பவர்கள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/111&oldid=1669798" இலிருந்து மீள்விக்கப்பட்டது