பக்கம்:இந்து தேசியம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.பரமசிவன் 115 இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றிலும், தாழ்த்தப்பட்டோர் இயக்க வரலாற்றிலும் நடந்த குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் நிகழ்ச்சி புனா ஒப்பந்தம் ஆகும். காங்கிரசு இயக்கத்திற்கும் அம்பேத்கார் இயக்கத்திற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் 1932-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமையன்று புனா நகரில் உள்ள எரவாடா சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த காந்தியடிகள் முன்னிலையில் ஏற்பட்டது. காந்தியடிகளின் ஒப்புதலின் பேரில் அன்று மாலை புனா நகரில் இராமகிருஷ்ண பண்டர்கர் சாலை முதலாம் எண் இல்லத்தில் இரு தரப்பிலுமாக மொத்தம் 23 அரசியல்வாதிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். காந்தியடிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அன்று அவர் சிறையில் உண்ணாவிரதம் தொடங்கிய 4வது நாள். அன்றே உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ள தாம் தயாராக இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமருக்கு காந்தி தந்திச் செய்தி அனுப்பினார். அதே போல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்களில் சர்.தேஜ்பகதூர் சாப்ரு. பண்டித மதன் மோகன் மாளவியா ஆகியோரும் பிரிட்டிஷ் பிரதமருக்கு ஒப்பந்தம் ஏற்பட்ட செய்தியை தந்திச் செய்தியாக அனுப்பினர். மறுநாள் காலை புனாவில் இருந்து பம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்று அன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பம்பாயில் நடைபெற்ற 'இந்துக்களின்' மிகப் பெரிய கூட்டம் ஒன்றில் மேற்குறித்த தலைவர்கள் ஒப்பந்தச் செய்தியை மக்களுக்கு விரிவாக அறிவித்தனர். அன்று பம்பாயில் மேலும் 18 தலைவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றுக் கொண்ட செய்தி அதற்கு மறுநாள் (26.09.1932) கிடைத்தது. அன்று மாலை 5.15 மணிக்கு எரவாடா சிறையில் மனைவி கஸ்தூரிபா காந்தி ஆரஞ்சுப் பழச்சாறு தர காந்தியடிகள் தமது 6 நாள் 5 மணி நேர உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அப்போது கவிக்குயில் சரோஜினி நாயுடு, மோதிலால் நேருவின் மனைவி, சர்தார் வல்லபாய் படேல், காந்தியடிகளின் செயலாளர் மகாதேவ தேசாய் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஒப்பந்தம் காங்கிரசு இயக்கத்திற்கும் அம்பேத்கார் இயக்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தமா? அல்லது க சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான ஒப்பந்தமா? என்பதை நுனித்து ஆராய வேண்டும். அம்பேத்கார் இது தன்னுடைய இயக்கத்திற்கும் காந்தியாரின் தலைமைக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் என்றே கருதினார். காந்தியாரோ தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் பிரதிநிதியான காங்கிரசுக் கட்சிக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் இரண்டு பெரும் பிரிவுகளுக்கும் (ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/116&oldid=1669804" இலிருந்து மீள்விக்கப்பட்டது