பக்கம்:இந்து தேசியம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 'இந்து' தேசியம் இந்த மாநாட்டில் காந்தியடிகளின் செயல்பாடு குறித்து இலண்டனிலிருந்து வெளிவந்த 'தி டைம்ஸ்' என்ற ஆங்கிலப் பத்திரிகை பின்வருமாறு எழுதியது. விவாதத்தின் போதான அவரின் (காந்தியின்) குறுக்கீடுகள் பிரதானமாகக் கொள்கைப் பரப்பாளரின் பேசுகின்ற விசயத்திற்கு தன்மையை ஒத்திருந்தனவேயன்றி உண்மையான தொடர்பின்றியிருந்தன. மாநாட்டுப் பணிக்கான உண்மையான ஆக்கப்பூர்வமான பங்கினை அவர் ஆற்றவில்லை,2 காந்தியடிகள் இறந்த மறுநாள் அன்றும் அப்பத்திரிகை இதே கருத்தினை வெளியிட்டது. மாநாட்டு நிகழ்ச்சிகளில் நிறைவடையாத காந்தியடிகள் நாடு வாரம்) கைது திரும்பிய ஒரு வாரத்திற்குள் (1932 ஜனவரி முதல் செய்யப்படுகிறார். பிரிட்டன் பிரதமர் மாநாட்டு நிகழ்ச்சிகளை ஆராய்ந்து முடிவு எடுக்க லோதியன் பிரபு என்பவர் தலைமையில் குழு ஒன்றை (Lord Lothian Committee)நியமித்தார். தாழ்த்தப்பட்டோர் இயக்கத் தலைவர்களின் அன்று நாடறிந்த தலைவர்களாக இருந்தவர்கள் டாக்டர்.அம்பேத்கார், 1893லேயே 'பறையன்' என்ற தமிழ் இதழைத் தொடங்கிய ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா ஆகியோரே ஆவர். இவர்களுக்கு அடுத்த நிலையில் ராஜபோஜ். கவாய், பி.பாலு, சிவராஜ். மீனாம்பாள் சிவராஜ். சிவசண்முகம் பிள்ளை ஆகியோர் இருந்தனர். இவர்களில் வயதில் மூத்தவரான ரெட்டமலை தென்னாப்பிரிக்காவில் சீனிவாசன் காந்தியோடு பணி செய்து. இந்தியா திரும்பியவர். வந்தவுடனேயே ஜஸ்டிஸ் இயக்கத்தில் சேர்ந்தார். 1923- 26இல் சென்னை சட்டசபையில் உறுப்பினராக இருந்தவர். 1892 ஆதி திராவிட மகாஜன சபாவைத் தொடங்கியவரும் இவர்தான். 11.03.1932இல் சிறையில் இருந்த காந்தியடிகள் தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதிக்கு தன்னுடைய எதிர்ப்பினை மீண்டும் தெரிவித்து, பிரிட்டன் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இக்கடிதம் எழுதிச் சில நாட்களுக்குள் (29.03.1932) எம்.சி.ராஜாவுக்கும் இந்து மகாசபைத் தலைவர் டாக்டர் பி.எஸ்.மூஞ்சேவுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுகிறது. காங்கிரசு எதிர்ப்பிலும் தாழ்த்தப்பட்டோர் நலனிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த எம்.சி.ராஜா திடீரென்று தாழ்த்தப்பட்டோர் தனித்தொகுதி கோரிக்கையைக் கைவிட்டு விட்டு பொதுத் தொகுதி முறையினை ஏற்றுக் கொண்டு ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டார். தாழ்த்தப்பட்டோரின் மற்ற தலைவர்களுக்கு இவ்வொப்பந்தம் வியப்பிற்குரியதாக இருந்தது. B.Com இருந்தது.ksworld

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/121&oldid=1669809" இலிருந்து மீள்விக்கப்பட்டது