________________
தொ.பரமசிவன் 123 செல்வாக்கை ஏற்படுத்தும் விதத்தில் சட்டமன்றங்களில் அவர்கள் சார்பில் பேசுவதற்கு, அவர்களாலேயே ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுள்ள பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பினைத் தடுத்திடுவதற்காகவே இத்தகைய உண்ணாவிரதத்தை நீங்கள் மேற்கொள்ளப் போகிறீர்கள்' என்று குற்றம் சாட்டினார்;9 இதையும் மறுத்து ஒரு கடிதம் எழுதிவிட்டு காந்தியடிகள் குறித்த நாளில் (20.09.1932 செவ்வாயன்று) தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். காங்கிரசு இயக்கத் அதைத் தொடர்ந்து நாடெங்கிலும் தலைவர்கள் பரபரப்படைந்தனர். காந்தியாரை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவிடவும், பழிவாங்கும் உணர்ச்சியோடும் பிரிட்டிஷ் பிரதமர் இனவாரித் தீர்ப்பை அளித்ததாக பட்டாபி சீத்தாராமையா குறிப்பிடுகிறார்.20 தாழ்த்தப்பட்டோருக்கு காங்கிரசு இயக்கமே பாதுகாப்பு என்கிற கருத்து நாடெங்கிலும் பரப்பப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி கோரிக்கையை எதிர்த்து நாடெங்கிலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டு தேசியக் கவிஞர்களான நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையும், தேசிய விநாயகம் பிள்ளையும், தாழ்த்தப்பட்டோருக்குத் தனித் தொகுதி முறை வேண்டாம், பொதுத் தொகுதியே போதுமென்று கவிதை எழுதினர். அதே நேரத்தில் காந்தியடிகளுடைய கருத்தை மறுத்தும் தமிழ்நாட்டில் பல குரல்கள் எழுந்தன. 'காந்தி கண்டன கீதம்' என்ற பெயரில் கவிதை நூல் ஒன்றும் வெளிவந்தது. அந்நூலில் பெயர் அரிசனப் எதற்குதவும் சாற்றிடும் என்று காந்தியடிகள் பயன்படுத்திய தாழ்ந்தவரைக் கைதூக்குமா" அரிசன் என்ற சொல்லுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. 'பாம்புக்கு வால் காட்டி மீனுக்குத் தலை காட்டும் பார்ப்பன தாசர் காந்தி' என்றும் கவிதைகள் எழுந்தன." அது இதற்கிடையில் செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் காங்கிரசு தலைவர்கள் பம்பாயில் கூடினர். சர்.தேஜ் பகதூர் சாப்ரு, பண்டித மதன்மோகன் மாளவியா. எம்.ஆர்,ஜெயகர் போன்ற காங்கிரசு சார்புடைய இந்து மதத் தலைவர்களும், இராஜாஜி. தேவதாசு காந்தி போன்ற காங்கிரசு தலைவர்களும், இந்து மகாசபைத் தலைவர் டாக்டர் மூஞ்சேயும் பம்பாயில் இருந்தனர். 'பொதுத் தொகுதியே போதும்' என்று மூஞ்சேயோடு ஐந்து மாதத்திற்கு முன்னரே ஒப்பந்தம் செய்து கொண்ட தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்டோர் தலைவரான எம்.சி.ராஜாவும் ) அவருடைய மராட்டிய நண்பர் பிபாலுவும் பம்பாய் வந்து பம்பாய் வந்து சேர்ந்தனர்.