பக்கம்:இந்து தேசியம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.பரமசிவன் 125 அவர்களோடு காந்தியடிகளின் மகன் தேவதாஸ் காந்தியும் இருந்தார். மறுநாள் 21ஆம் தேதி காலை ஏழு மணிக்குச் சிறை அலுவலகத்தில் அவர்கள் காந்தியடிகளைச் சந்தித்தனர். அப்போது சரோஜினி நாயுடுவும் உடன் இருந்தார். பேச்சு வார்த்தை விவரங்களைக் கேட்டுக் கொண்ட காந்தியடிகள், 'நான் முதலில் டாக்டர் அம்பேத்காரையும், ராவ்பகதூர் எம்.சி.ராஜாவையும் நேரில் சந்தித்து அவர்கள் மனதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்' என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார். அப்போதே அவருடைய உடல்நிலை சற்றுத் தளர்ந்திருந்தது. அதே நாளில் புனா நகரத்துத் தாழ்த்தப்பட்டோர் தலைவரான ராஜபோஜ் தனது நண்பருடன் வந்து காந்தியடிகளைச் சந்தித்து, அவருக்குத் தன் ஆதரவினைத் தெரிவித்துக் கொண்டார். அன்றே பண்டித மதன்மோகன் மாளவியாவும், எம்.சி.ராஜாவும் புனாவுக்கு வரவழைக்கப்பட்டனர். மறுநாள் சாப்ருவின் வேண்டுகோளின்படி அம்பேத்கார் பம்பாயிலிருந்து புனா நகரம் வந்து சேர்ந்தார். இதற்கிடையில் காந்தியடிகள் புனாவில் தங்கி இருந்த இராஜாஜியையும், இராசேந்திர பிரசாத்தையும் தன்னைச் சிறையில் வந்து சந்திக்குமாறு அழைத்தார். 'நீங்கள் நேற்று தந்த திட்டத்திலே ஒரு பெரிய குறைபாடு உள்ளது. இதனால் தாழ்த்தப்பட்டோர் மத்தியில் கூட்டுத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனித்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பிரிவு உண்டாகும். அதனால் உயர்வு மனப்பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் அவர்களிடத்தில் உண்டாகும். எனவே இதற்கு நான் சம்மதிக்க முடியாது என்று காந்தியடிகள் அவர்களிடம் கூறி அனுப்பினார், புனா நகரத்துக்கு வந்திருந்த அம்பேத்காரோடு வெளியில் இருந்த தலைவர்களில் சாப்ருவும். எம்.ஆர் ஜெயகரும் மறுபடியும் பேச்சு வார்த்தைத் தொடங்கினர். பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஜெயகரின் குரலில் தொனித்த ஏமாற்றத்தைக் கண்ட அங்கிருந்த காங்கிரசுத் தலைவர்கள் அம்பேத்காரை ஏசத் தொடங்கினர். ஜெயகரும், சாப்ருவும் மீண்டும் காந்தியடிகளைச் சிறையில் சந்தித்தனர். காந்தியடிகளை அம்பேத்கார் சிறையில் நேரில் சந்தித்தால் அவருடைய பிடிவாதம் தளர்ந்து போகும் என்று நம்பி. அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். இதற்கிடையில் ராவ் பகதூர் எம்.சி.ராஜாவும் அவரது நண்பர் பிபாலுவும் காந்தியடிகளைச் சிறையில் சந்தித்தனர். எம்.சி.ராஜா இந்து மகாசபைத் தலைவர் டாக்டர் மூஞ்சேயோடு கூட்டுத்தொகுதி முறை போதுமென்று ஓர் ஒப்பந்தம் செய்து இருந்தார். இப்பொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/126&oldid=1669815" இலிருந்து மீள்விக்கப்பட்டது