________________
தொ.பரமசிவன் 129 ஒப்பந்தம் முடித்த ஐந்து மாத காலத்துக்குள் காந்தியடிகள் ஹரிஜன், என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். இந்த பத்திரிகையின் முதல் இதழுக்கு அனுப்பிய செய்தியில் தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவு பெரிய அளவிற்குப் பிரச்சனைகள் எதையும் தீர்த்து விடாது என்று அம்பேத்கார் குறிப்பிட்டு இருந்தார்.24 1935-லேயே புனா ஒப்பந்தம் தோல்வியடைந்தது என்று டாக்டர் அம்பேத்கார் குறிப்பிட்டார். அதே ஆண்டில் காங்கிரசு இயக்கத்தின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீத்தாராமைய்யர், 'இனவாரித் தீர்ப்பின் ஒரு பகுதி புனா ஒப்பந்தத்தால் அழித்து எழுதப்பட்டது. இன்னமொரு பகுதி அழித்து எழுதுவதற்காக எஞ்சி நிற்கிறது' என்று வன்மம் நிறைந்த குரலில் எழுதியிருக்கிறார்.2 25 1937 தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட 151 இடங்களில் 78 இடங்களைக் காங்கிரசு கைப்பற்றியது. ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு காங்கிரஸ் திட்டங்களை ஏற்றுக் கொள்வதாக உறுதி கொடுத்த தீண்டத்தகாதவர் எனக் கருதப்படும். வேட்பாளர்களை காங்கிரஸ் இசைவுச் சீட்டில் (டிக்கெட் போட்டியிட வைத்து வெற்றிக் கொள்வதில், ஒரு முழுமையான வலிமை வாய்ந்த சொல்லப் போனால், ஒரு பழியார்வம் மிக்க பங்கினையாற்ற காங்கிரஸ் தயங்கவில்லை. தனது நிதி வளத்தைக் கொண்டு காங்கிரஸ் தனித்த இலாபமடைந்தது. இவ்வாறாக காங்கிரஸ் தனது அரசியல் வியாபாரத்தில் பெரும்பகுதி இலாபத்தைப் பெற்றது. அதிகபட்சமாக தமிழ்நாட்டின் 30 இடங்களில் 26 இடங்களையும் குறைந்த பட்சமாக பம்பாயில் 15 இடங்களில் 4 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியது. புனா ஒப்பந்தத்தை உருவாக்குவதில் காங்கிரசும் இந்து மகா சபையும், தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்களில் முக்கியமானவர் எம்.சி.ராஜா. இவர் தமிழ்நாட்டுக்காரர் என்பதால் முதலில் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களில் ஒருவர், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார். 1921-1924 சென்னை சட்டசபை உறுப்பினராகவும் 1924-26 மத்திய சட்டசபையில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட உறுப்பினராகவும் இருந்த எம்.சி.ராஜா பொது வாழ்க்கையிலும் அரசியல் அனுபவத்திலும் அம்பேத்காருக்கு முந்தியவராவார். மயிலாப்பூர்க்காரரான இவர் திரு.வி.க.வின் நண்பர். அவரோடு வெஸ்ட்லியன் மிசன் கல்லூரியில் பணிபுரிந்தவர். பின்னர் 1921-22இல் பக்கிங்காம் ஆலையில் ஏற்பட்ட வேலை நிறுத்தத்தில் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களை ஒன்றுபடுத்திச் சங்கம் வளர்த்தவர். 'நீங்கள் எங்கள் இனத்தாரைக் கொண்டு புரட்சி செய்வித்தால்