தொ.பரமசிவன் 13
குரங்குப் பிடியாய் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். வரலாறு ஏதும் அறியா திடீர்த் தமிழ்த்தேசியர்கள், ஏற்கனவே மக்களிடம் வலிமையாய் ஊன்றி நிற்கிற திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வளரத் துடிக்கும் முன்னாள் பொதுவுடைமைத் தமிழ்த் தேசியர்கள் ஆகியோரின் வெறும் வாய்க்குக் கிடைத்த அவலாகிப் போனது.
1938ஆம் ஆண்டு செப்டம்பர், 11ஆம் நாள் சென்னைக் கடற்கரையில் கூட்டப்பட்ட ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் பெரியார் முதன்முதலாக `தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்தார். இரண்டு மாதங்களில் அவர் அப்போராட்டத்துக்காக சிறைப்படுத்தப்பட்டார். அன்றைய சென்னை மாகாணத்தை சட்டசபைத் தேர்தல் நடக்கத் தொடங்கியதிலிருந்து தொடர்ச்சியாக 17 ஆண்டு காலம் ஆளும் கட்சியாய் இருந்துவந்த நீதிக்கட்சியில் தலையெடுத்த தன்னலப் போக்குகளாலும். கட்டுப்பாடற்றத் தன்மையாலும் 1937 தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. அழிவை நோக்கிச் செல்லும் அக்கட்சியை மீண்டும் வளர்த்தெடுத்து நிறுத்தும் ஆற்றல் இவருக்கே உண்டு எனக் கருதி, சிறையில் இருந்த காலத்திலேயே, நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியாரைத் தேர்ந்தெடுத்தனர் அக் கட்சியினர். அரசு நிர்வாகக் கட்டமைப்பில், தமிழ் மாவட்டங்களோடு தெலுங்கு,கன்னட, மலையாளப் பகுதிகள் சிலவும், கட்சி நிர்வாகக் கட்டமைப்பிலும் அம்மொழி பேசும் மக்களும் கலந்து இருக்கும் சூழலே அப்போது நிலவியது. அவர்களின் வேண்டுகோளும். அவர்களையும் உள்ளிழுத்து தம் குரலை வலுவாக்கும் செயலுத்தியாகவும், பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை திராவிட நாடு திராவிடருக்கே என மாற்றி அமைத்துக் கொண்டார். என்றபோதிலும் 1956இல் இணைந்திருந்த பிற மொழிப்பகுதிகள் அம்மொழி பேசும் பிற பகுதிகளோடு இணைக்கப்பட்டு மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதும், மீண்டும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தைத் தான் முன்வைத்தார். ஆனாலும் அறியாதோரும். அறிந்தோர் என எண்ணும் சிலரும் தமிழர் ஒருங்கிணைவை, தமிழர் எழுச்சியை, தமிழ்த் தேசிய உருவாக்கத்தைச் சிதைக்க வேண்டும் என்ற சதித் திட்டத்தின் அடிப்படையில்தான் பெரியார் திராவிடர். திராவிட நாடு என்றே இன்றளவும் செயற்கை வாதத்தை வலிந்து முல் வைக்கின்றனர்.
அடுத்துவரும் 'இதுதான் பார்ப்பனியம், எனும் கட்டுரை. இது முன்பு நூலாக வந்தபோது தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். பார்ப்பனியத்தின் தன்மையை, ஆதிக்கத்தை, நிலைநிறுத்தச்