20 'இந்து' தேசியம்
அதுபோலவே விஷ்ணுவை முழுமுதற்பொருள் -உலகைப் படைத்த கடவுள் - என்று சொல்லக் கூடியவர்கள் வைணவர்கள். வைணவக் கோவில் கருவறையில் நுழைந்து அருச்சனை செய்கிறவர்கள் வைணவப் பிராமணர்கள். அவர்களிலும் வைகானசம், பாஞ்சராத்திரம் என்ற இரண்டு ஆகமநெறிகளைப் பின்பற்றுபவர்கள் உண்டு. தங்களுக்குள் மட்டும்தான் அவர்கள் திருமண உறவு வைத்துக் கொள்வர். அவர்கள் தனிப்பிரிவினர். இவ்விரண்டும் அல்லாத 'ஐயர்' என்ற - பெயரோடு வேதங்களை மட்டும் நம்பும் பிரிவினர் உண்டு. 'ஸ்மிருதி என்பது வேதத்தின் இன்னொரு பெயர். 'சொல்லப்படுவது' என்பது அதன்பொருள். எழுதப்படாமல் சொல்லவும், கேட்கவும் படுவதனால் வேதத்திற்கு அந்தப் பெயர் வந்தது. பார்ப்பனரல்லாதவர்களின் கண்ணுக்கும் காதுக்கும் தெரியவிடாமல் மறைத்துக் கொள்வதால் வடமொழி வேதத்துக்கு 'மறை' என்ற பெயர் வந்தது. எனவேதான் அதைப் பார்ப்பனர்கள் மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வார்கள். இந்த ஸ்மிருதியை மட்டும் கடவுளைப் போல வணங்குகிறார்கள் ஸ்மார்த்தர்கள். இவர்கள் ஆதி சங்கரருக்குப் பிறகு பெரும்பாலும் அத்வைத மரபு சார்ந்தவர்கள். இவர்களுக்கு பரமார்த்திகத்திலே அதாவது உயர்ந்த தத்துவ நிலையிலே கடவுள் என்று ஒருவர் கிடையாது. எனவே, இது ஒரு மறைமுக நாத்திகம். இவர்கள் எல்லாம் கோயிலிலே வேதத்தை மாத்திரம்தான் சொல்வார்கள். வேதங்களைக் கருவறைக்குள் சொல்லக் கூடாது. கருவறைக்குள்ளே சொல்லப்படுவதெல்லாம் கோயிலில் இடைகழி மண்டபம் தாண்டி அடுத்தாற் போலுள்ள வடமொழியிலமைந்த அருச்சனைகள். மண்டபத்திலிருந்து வேதம் கொல்ல வேண்டும். வேதப்பார்ப்பனர் வேறு. கோவில் பார்ப்பனர் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கோயிற் பார்ப்பனர்களில் சைவர், வைணவர் உண்டு. இவர்களைத்தான் சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியார்கள் என்று சொல்வது வழக்கம். அது அல்லாமல் பல்வேறு சாதிகளைச் சார்ந்த சைவர்கள் உண் சாதிகளைச் சார்ந்த வைணவர்கள் உண்டு. இந்த நெறிகளுக்குள் ண்டு,பல்வேறு வராமல் மாடனை, காடனை, அம்மனை வணங்கும் மக்கள்தான் பெரும்பான்மையானவர்கள். சைவர்களும், வைணவர்களும் கோயில் வழிபாட்டுக்காரர்கள்,ஸ்மார்த்தர்கள் கோயில் வழிபாட்டுக்காரர்கள் கோயில் வழிபாட்டுக்காரர்கள் அல்ல. இப்பொழுது எல்லாக் கோயில் அல்ல. கோவிலுக்குள்ளே வேதம் சொல்பவர்கள் என்பது தவிர குடமுழுக்குகளிலும் சங்கராச்சாரியார்தான் முன்னேவந்து நிற்கிறார். எதிர்த்ததுதான் திருநெல்வேலிச் இது ஆகமங்களைக் கேலி செய்வதுபோல் இருக்கிறது. இதனை எதிர்த்ததுதான் திருநெல்வேலிச் சைவர்கள் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்கள்.