பக்கம்:இந்து தேசியம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 29

சைவ மடங்களை வைத்திருப்பவர்கள் வருணதரும கணக்குப்படி சூத்திரர்கள். ஆனால் நடைமுறையிலே பிராமணர்களுக்கு அடுத்த உயர் சாதி நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கு என்ன பொருள்? வருணாசிரம தருமம் இங்கு நடைமுறையிலே இல்லை. இங்கே சாதிதான் இருந்தது. இருக்கிறது. எனவே கோயில் சாதி பேணுகிறதே தவிர வருணாசிரம தருமத்தைப் பேணவில்லை.

அவரவர் தருமம்" என்கிறார்களே, அதன் அர்த்தம் என்ன?
இப்படிச் சொல்லுகின்ற பார்ப்பனர்களின் ஆசைப்படி ‘அவரவர் தருமம்" என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும். பிராமணர் வேதம் ஓதிக்கொண்டிருக்க வேண்டும். பிராமணர்கள் வேதமும் ஓத வேண்டும். அரசியலும் செய்ய வேண்டும். சமூகத்தில் மிக உயர்ந்த பதவிகளாகிய தலைமை அமைச்சர் பதவியிலோ, குடியரசுத்தலைவர் பதவியிலோ புகழ்பெற்ற மருத்துவராகவோ, வழக்கறிஞராகவோ இருக்க வேண்டும். பேருந்துப் போக்குவரத்து பெருந்தொழிலாக மாறியபோது பார்ப்பனர்கள் அதற்குள் நுழைந்து முதலாளிகள் ஆனார்கள். பட்டறைத் தொழில் பார்ப்பனர்களின் பரம்பரை தர்மத்துக்கு உடன்பாடா? இதுதான் "அவரவர் தருமம்" என்பதற்கான உண்மையான அர்த்தம்.

பகுத்தறிவு வாதத்தால்தான் கோயில்கள் பாழடைந்து போய்விட்டன என்று சொல்கிறார்களே?
பகுத்தறிவு வாதத்தால் என்றல்ல, அவர்கள் வெளிப்படையாகச் சொல்வது திராவிட இயக்கம் வந்தபிறகுதான் தமிழ்நாட்டுக் கோயில்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன என்ற குற்றச்சாட்டைத்தான். நாத்திகத்தோடு திராவிட இயக்கம் வந்தது 1925-க்குப் பிறகுதான். அதற்கு முன்னாலே பாழ்பட்ட கோயில்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு? இரண்டாவது, பார்ப்பனர் கையில் இருந்த - பாழ்பட்டுக் கிடக்கும் கோயில்கள் எல்லாம் தவிர எந்த ஊரிலாவது சாதாரண அம்மன் கோயில், சுடலை கோயில், பெரிய சொத்துடைமை நிறுவனங்களாக இருந்த - கோயில்கள்தானே இசக்கி கோயில், காத்தவராயன் கோயில் பாழ்பட்டுப் போகிறதா? எனில் உயிரோடு இருக்கிறது? பெருவாரியான 'மக்களுடைய ஆன்மீகம் உயிரோடு இருக்கிறதனால்தானே காத்தவராயன் கோயிலோ, சுடலை கோயிலோ, பொன்னியம்மன கோயிலோ அழியாமல் அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/30&oldid=1675482" இலிருந்து மீள்விக்கப்பட்டது