பக்கம்:இந்து தேசியம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 'இந்து' தேசியம்

இருக்கிறது. சுஜாதாகூட ஒருமுறை எழுதியிருந்தார். நவதிருப்பதியை சுற்றிப் பார்த்துவிட்டு வந்து. அவை வாழ்ந்த காலத்தை நினைத்துப் பார்த்துவிட்டு ‘அப்பொழுதெல்லாம் திராவிட இயக்கம் இல்லை” என்று. திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன்னூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே பெரும்பாலான கோயில்கள் பாழ்பட்டுப் போயின. அதற்கான காரணம். பிராமணர்கள் புதிய அதிகார மையத்தைத் தேடி அந்தக் கோயில்களை எல்லாம் கைவிட்டு விட்டு நகரங்களை நோக்கிப் புறப்பட்டுப் போனார்கள். 19-ஆம் நூற்றாண்டில் நீதிபதி முத்துச்சாமி ஐயரோ, எஸ்.எஸ். வாசனோ தங்கள் கிராமத்தைவிட்டு நகரத்திற்கு வந்ததற்கு திராவிட இயக்கமா காரணம்? திராவிட இயக்கம் பிறப்பதற்கு முன்னாலேயே இவர்கள் நகரத்திற்கு புதிய அதிகாரங்களையும், பொருள் வளத்தையும் தேடித்தான் கோயில்களைக் கைவிட்டு விட்டு வந்தார்கள்.

கோயில்களைக் காப்பாற்றவே முடியாதா?
எந்தக் கோயில்களை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பெரிய கோபுரங்களோடு கூடிய கோவிலையா? இல்லை. உங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலையா? அரசு ஆதரவிலே வளர்ந்த மிகப்பெரிய சொத்துடைமை நிறுவனங்களாக இருக்கிற கல்மண்டபங்களோடு கூடிய கோயில்களையும் காப்பாற்ற முடியும். எப்படி முடியும் என்றால் சமூகம் ஜனநாயகப்பட்ட பொழுது கோவில்கள் என்ற சொத்துடைமை நிறுவனங்களும் ஜனநாயகப்பட வேண்டும். ஆனால் அண்மையில் சங்கராச்சாரியார் ‘ஆழ்வார், நாயன்மார்களின் பிறந்தநாட்களை அந்தந்த சாதிக்காரர்கள் கொண்டாட. வேண்டும்” என்கிறார். நந்தனார், திருப்பாணாழ்வார் சந்நிதிகளில் பார்ப்பனர்கள் வழிபாடு செய்யமாட்டார்கள் என்பதுதான் இதன்பொருள். பார்ப்பனர்களைத் தலைமைச்சாதி (ஆக உயர்ந்த சாதி) என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வரை ஆன்மிகத்தில் சமத்துவம் ஏற்படாது.. கோயிலும் 'அனைத்து மக்களுக்கும் உரியது கோவில் நுழைவுச் சட்டத்தின் விளைவாகத்தான். இனிமேல் அவை ஆகாது. இதுவரைக்கும் அவை தாக்குப் பிடிப்பதற்கான, காரணமே. வாழவேண்டுமானால் அனைத்து சாதியினரும் தகுதி காரணமாக அருச்சகராகலாம் என்று அண்மையிலே உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதே. அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தினால் இந்தக் கோயிலிலுள்ள கலைச்செல்வங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/31&oldid=1675497" இலிருந்து மீள்விக்கப்பட்டது