2
சங்கரமடம்
தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்
சங்கர மடம் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறதே?
சங்கரமடம் இப்பொழுதுதானா சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது. அதன் தோற்றம், சங்கராச்சாரியாரின் நடைமுறைகள், அவர் பின்பற்றுகின்ற கொள்கைகள், அவருடைய அரசியல் தலையீடுகள், எல்லாமே சிக்கலுக்குள்ளானவைதான். 1987ஆம் ஆண்டு ஆகஸ்டு விட்டுவிட்டு கமண்டலத்தையும் தண்டத்தையும் மாதத்தில் தலைக்காவேரிக்கு ஓடிப்போனாரே, அதுவும் சிக்கல்தானே!
2500 ஆண்டுகால பழமையான மடம் என்கிறார்களே?
ஆதிசங்கரர் காலமே கி.பி 8ஆம் நூற்றாண்டுதான். கி.பி.7ம் நூற்றாண்டில் பிறந்த திருஞானசம்பந்தரை அவர் 'திராவிட சிசு' என்று குறிப்பிடுகின்றார். பிறகு எப்படி? 2500 ஆண்டு மடம் என்பது பொய். இது மாதிரியான வரலாற்றுப் புரட்டு வேறொன்றுமில்லை. ஏனென்றால், இது சிருங்கேரி மடத்தினுடைய ஒரு கிளை கும்பகோணத்திலே இருந்தது. அப்புறம் காஞ்சிபுரத்திற்கு கொண்டு வந்தார்கள். 1830லே கூட இந்த மடத்தினுடைய தலைவரை 'சிக்குடையார்', 'இளைய மடாதிபதி என்றுதான் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, சிருங்கேரிக்காரர் மூத்த மடாதிபதி (பீடாதிபதியும்) இவர். இளைய மடாதிபதி. காஞ்சிபுரத்திற்கு இவர்கள் வந்த நேரத்திலே காமாட்சியம்மன் கோயிலில் குழுக்களுக்கிடையிலே ஒரு தகராறு. ஒரு தற்காலிக ஏற்பாடாகக் கம்பெனி அரசாங்கத்தால் காமாட்சியம்மன் கோவில் இவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த மடத்திற்கு நெருக்கமான தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் இரா. நாகசாமியைக் கேட்டுப் பாருங்கள், அவரே
இம்மடத்தின் வரலாற்றை ஒத்துக் கொள்ளமாட்டார்.
2500 ஆண்டுப் பழமை என்றால் காஞ்சியை ஆண்ட பல்லவன் உட்பட, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இம்மடத்திற்கு ஏதேனும் செய்திருக்கிறார்களா? சான்று காட்ட முடியுமா?