பக்கம்:இந்து தேசியம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 'இந்து' தேசியம்

வேதத்திலே சொல்லப்படுகிற எல்லாத் தெய்வங்களும் செத்துப்போய் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயிற்று. அந்தத் தெய்வங்களுக்கு ஒருபோதும் உருவமும் கிடையாது. கோயில் என்பது ஆகம நெறிகளால் ஒழுங்குப்படுத்தப்பட்டது. வழிபாட்டிற்குரிய இடமாகும். உண்மையாகச் சொல்லப்போனால் சங்கரமடத்தாருக்குக் கோயில் என்பது சம்பந்தமில்லாத ஒரு இடம் ஆகும். இவர்களுக்கு ஸ்மிருதி (சொல்ல மட்டுமே கூடிய ஒன்று) என்று சொல்லக்கூடிய ஓதப்படுகிற வேதமந்திரப் பாடல்கள்தாம் கடவுள் மாதிரி.
"வேதங்கள் மனிதர்களால் செய்யப்பட்டவை அல்ல. ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தவை. ரிஷிகள் மூலமாக அதனை மண்ணுக்கு மந்திரப் பாடல்களாக இறக்கி வைத்தார்கள்" என்று இவர்கள் வேதங்கள் குறித்துச் சொல்வார்கள் மந்திரம் என்றால் மறைவானது. அதனால்தான் வேதத்திற்கு 'எழுதாக் கிளவி' என்ற பெயர். பார்ப்பனர் அல்லாதாரின் கண்ணுக்கும் காதுக்கும் மறைக்கப்பட்டதால்தான் தமிழில் அதற்கு 'மறை' என்று பெயர். 'கிறித்தவத் திருமறை', 'இசுலாமியத் திருமறை' என்று சொல்வதெல்லாம் தவறு. இவையெல்லாம் மறைக்கப்பட்டவை அல்ல. வெளிப்படையானவை.
வேதத்தைத் தவிர வேறு தெய்வங்கள் இவர்களுக்குக் கிடையாது. அந்த வேதத்தினுடைய சாரமாக 'அகம் ப்ரம்மாஸ்மி' (நானே பிரம்மம் ஆக இருக்கிறேன்) 'த த்வம் அஸி', ( நீ தேடுகிற அதுவாய் நீயே இருக்கிறாய்) என்று மகா வாக்கியங்களைச் சொல்வார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் நான் தேடுகிற கடவுளின் வடிவாக நானே இருக்கிறேன் என்பதுதான். 'நானே கடவுள், கடவுளே நான்' என்பதுதான் அவர்களுடைய சித்தாந்தம். இதைத்தவிர பெரும்பான்மையான மக்கள் திரள் நம்புவதுபோல தனியான ஒரு முதற்பொருளை (ஈஸ்வரனை அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை.

வேதத் தெய்வங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து விட்டன என்கிறீர்கள். ஆனால் இன்னும் வேத வளர்ச்சி வேதப் பாடசாலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றனவே?
வேதப் பாடசாலைகள் 'ஸ்மார்த்தப் பார்ப்பனர்களுக்கு மட்டும் உரியதுதானே. மற்ற சாதியில் பிறந்தவர்களை வேதம் படிக்க இன்றுவரை அனுமதிக்க மறுக்கிறார்களே. காசு கொடுத்துச் சேர்வதாக இருந்தாலும் அவர்கள் கற்றுத் தர மாட்டார்கள். வேதம் என்பது பிறப்பினாலே சாதியினாலே பிராமணர்களாக இருப்பவர்களுக்கு மட்டும்தான். தமிழ்நாட்டிலே வேதப் பாட சாலைகளில் இதுதான் நடைமுறை. நாட்டுக்கோட்டை செட்டியார்கள் உருவாக்கிய வேதபாடசாலைகளிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/39&oldid=1677655" இலிருந்து மீள்விக்கப்பட்டது