பக்கம்:இந்து தேசியம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 'இந்து' தேசியம்

மஞ்சரி என்று பார்ப்பனர் கையிலே இருந்த பத்திரிகைகள் திரும்பத் திரும்ப எழுதி எழுதிப் பொய்யை உண்மையாக்கிவிட்டார்கள். பின்னாளிலே, வானொலி வந்ததும் இதைத்தான் செய்தது. தொலைக்காட்சியும் இதையே செய்தது. எனவே தகவல் தொடர்பு சாதனங்கள்தான் இப்போக்கினை உருவாக்கின. அதாவது சங்கராச்சாரியார் கோயில் வழிபாட்டுக்காரர் என்பது போல.

சங்கராச்சாரியார் எனது காமாட்சி அம்மனே நீதான் என்று குறிப்பிட்டதாக வந்த செய்தி பற்றி?
காமாட்சி அம்மனை அவர்கள் வணங்க மாட்டார்கள். காமாட்சி அம்மன் சன்னதியில் நின்று கொண்டு கையைத் தனியாக எடுத்து நெஞ்சுக்கு நேராக வைத்துக் கும்பிடும் வழக்கம் அவர்களுக்குக் கிடையாது. நம்மைப் போல கையினை நெஞ்சுக்கு மேலே வைத்து கும்பிடும் வழக்கம் கிடையாது. கையினை நெஞ்சின் மேல் வைத்து நீ, நான், நான், நீ என்றுதான் சொல்வார்கள். அதாவது 'காமாட்சியே நீதான் நான்' என்று சொல்வார்கள்.

இன்று கும்பாபிசேகம் போன்ற விஷயங்களுக்கு நாள் குறித்துக் கொடுக்கிறாரே?
அரசியல் ரீதியாக, மறைமுகமாக அரசியல் அதிகாரத்தை இவர்கள் கைப்பற்றிக் கொண்டதனாலேதான். எழுத்து ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகைகள் இவர்களை இந்து மதத்தின் ஒரே தலைவர் ஒப்பற்ற தலைவர், என்று காட்டியதனாலே, அறியாத மக்கள், அறியாத பக்தர்கள், இவர்களைக் கோயிலுக்குள்ளே அனுமதிக்கின்றனர். இவர்கள் கோயில் சம்பந்தப்பட்ட ஆகமங்களை அறியாதவர்கள். ஆகமங்கள் சங்கராச்சாரியாருக்குத் தெரியாது. ஏனென்றால் இவர்கள் ஆகமத்திற்கு எதிரானவர்கள். கோயில்கள் ஆகமங்களால் ஒழுங்குபடுத்தப்பட்டவை. கும்பாபிசேகம், குடமுழுக்கு எல்லாம் ஆகமவிதிப்படி நடக்க வேண்டியவை. இவர்கள் அதிகாரத்தின்படி அல்ல. ஆனால் அதிகாரத்தைத் தவறாகக் கையில் எடுத்துப் பயன்படுத்தி இந்துக்களின் தலைவர் என்று காட்டுவதற்கு இவர்கள் செய்கிற வேலை இது.

கோயில் வழிபாட்டிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறீர்களே அது எப்படி?
ஐயா, காமாட்சியம்மன் கோயில் தவிர இவர்கள் கட்டுப்பாட்டில் வேறு எந்தப் பழமையான கோயிலும் கிடையாது. இவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/41&oldid=1677663" இலிருந்து மீள்விக்கப்பட்டது