பக்கம்:இந்து தேசியம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 இந்து' தேசியம்

காலத்திலேயே புதுவார்த்தையைக் கண்டு பிடித்தார்கள். இரண்டாவது சங்கராச்சாரியை இளையவர் என்று சொல்லாமல் புதுப்பெரியவர் என்று சொன்னார்கள். சரி மூன்றாவது சங்கராச்சாரியைக் கொண்டு வந்தார்கள். இவரை என்ன சொல்வார்கள் என்று பார்த்தோம். இளைய சங்கராச்சாரி என்று சொல்வார்கள் என்றால் அவர் பெரியவர் அடுத்துப் புதுப் பெரியவர் அடுத்தவரை பாலபெரியவர் என்று சொன்னார்கள். இது பிராமணியத் தன்மை தன் சாதிய மேலாண்மையினைத் தக்க வைத்துக் கொள்வதையே காட்டுகிறது. மற்ற மடங்களில் இளைய மடாதிபதி என்று சொல்வார்கள். இவர்கள் மட்டும் சின்ன என்ற வார்த்தையைச் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவரை மகாப்பெரியவர் என்கிறார்கள். மக்கள் மொழியின் மீதான வன்முறை இது. அது போலவே மூத்த மடாதிபதி உயிரோடு இருந்தபோது அவரைத் தெய்வம் என்றார்கள். அவரது உரைகளைத் தொகுத்துப் புத்தகமாகப் போட்ட போது அந்தப் புத்தகத்திற்குத் தெய்வத்தின் குரல் என்று பெயர் வைத்தார்கள்.

இந்த மடத்திலுள்ளவர்கள் ஸ்மார்த்தப் பிராமணர்கள் என்கிறீர்கள். ஆனால் இதற்கு ஆதரவு கொடுப்பவர்களில் கணிசமானவர்கள் வைணவ மற்றும் சைவ பிராமணர்கள்தானே?
சிவப்பிராமணர்களோ, வைணவப் பிராமணர்களோ இந்த மடத்திற்கு ஆதரவு தர மாட்டார்கள். உள்ளே நுழையவும் மாட்டார்கள். எல்லாருக்கும் மேலே ஒரு சாதி இருக்கிறதல்லவா? பணக்காரர்கள், குறிப்பாகப் பெரும் பணக்காரர்கள். இந்த மடம் சாதி, வித்தியாசமின்றிப் பெரும் பணக்காரர்களின் ஆதரவைத் தனக்காக்கிக் கொண்டுள்ளது. இப்பொழுது பத்திரிகைகளில் இது குறித்து செய்தி வருகிறது. ஏ.சி.முத்தையா செட்டியார் தமிழ்நாட்டினுடைய பெரிய தொழிலதிபர், கோடீஸ்வரர், அவரின்' மனைவி மடத்திற்கு வழக்கமாக வந்து போகிறவராக இருந்திருக்கிறார். அவருக்கு அம்மடத்தில் எந்தவித ஆன்மீக உரிமையும் கிடையாது; இருக்க முடியாது. பெரும் பணக்காரர்கள் மட்டுமே சாதி கடந்து இந்த மடத்தின் ஆதரவாளர்கள் ஆனார்கள். தவிர, சைவப் பிராமணர்களோ. வைணவப் பிராமணர்களோ, ஏழைகள், எளிமையானவர்கள் இவர்கள் ஆதரவாளர்கள் அல்லர். அதனால்தானே சங்கராச்சாரியார் காஞ்சியில் கைது செய்யப்பட்ட பொழுது காஞ்சியில் எதிர்ப்பு இல்லை. அவருக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் இல்லை என்பது மட்டுமல்ல, வைணவப் பிராமணர்கள் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் முன்பாக வெடி போட்டுக் கொளுத்தித் தங்கள் மகிழ்ச்சியினைத் தெரிவித்திருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/47&oldid=1677895" இலிருந்து மீள்விக்கப்பட்டது