தொ.பரமசிவன் 51
பிறகும் இந்த மடத்தை ஆன்மீக ரீதியிலான நிறுவனம் என்று நாம் நினைத்துக்கொண்டால் நாம் முட்டாள்களாவோம். இது ஒரு அரசியல் இயக்கமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லையே தவிர அவ்வாறுதான் செயல்பட்டு வந்தது. இப்பொழுது இதற்கு வந்துள்ள ஆபத்து. அரசியல் உலகத்தையும் பாதிக்கிற விஷயமாக உள்ளது. எளிய மக்களே நிறைந்து இருக்கிற இந்த நாட்டில் அவர்கள் சொல்கிற கோடிக்கணக்கான வரவு செலவுகளைப் பார்த்தால் இது ஆன்மீகம் பேசக்கூடிய இடம்தானா? என்று அச்சமாக இருக்கிறது. இது என்ன விளைவுகளை உண்டாக்கும் என்று கணிக்க இயலவில்லை.
என்ன விளைவுகளை உண்டாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்றால் மடங்கள் இப்படித்தான் இருக்கும். இது பொதுவிதி. இந்த மடமும் தப்பவில்லை. இந்த மடத்தைப் பற்றி சொல்லப்பட்டு வந்த ஊடகங்களால் உருவாக்கப்பட்டு வந்த தெய்வீக, புனித பிம்பங்கள் அனைத்தும் பொய்யானவையே என்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மீக ஊழல்வாதிகள் எப்போதாவதுதான் பிடிபடுவார்கள். எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது இவர்களிடம்தான். இதுதான் நமக்குக் கிடைத்திருக்கும் பாடம்.