பக்கம்:இந்து தேசியம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 'இந்து' தேசியம்

இதில் ஆரியம் திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே' என்று திராவிடம் என்ற சொல் தமிழ் மொழியைக் குறித்திருக்கிறது, கடந்த நூற்றாண்டில் கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லை மொழிக் குடும்பத்தைக் குறிக்கப்பயன்படுத்தினார். ஆனால் அவருக்கு முன்னர் 1847இல் திராவிட தீபிகை என்ற பெயரோடு சென்னையில் ஒரு பத்திரிகை தொடங்கப்பெற்றுள்ளது. குறிப்பாக பின்னர் பஞ் சாபில் பிறந்த ஆரிய சமாஜத்தின் செல்வாக்கு காரணமாக ஆரியன் என்ற சொல் இந்திய நிலப்பகுதி மக்கள் அனைவரையும் குறிக்கும் சொல்லாகப் பார்ப்பனர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும் ஆரியநாடு' என்பது 1906இல் பாரதி கவிதை? பாரத தேவிக்கு நகரம் காசி. ஆறு கங்கை, மலை இமயம், வேதங்களே வெற்றிமுரசு. தாஜ்மஹாலும் எல்லோராவும் சரப சாஸ்திரியின் கையிலிருக்கும் புல்லாங்குழலும் பாரதிக்கு ஆரிய சம்பத்து. பாரதியின் குருவான திலகர் ஓர் ஆரிய சமாஜி. 1904இல் இந்திய சமூகத்தை (Aryan Nationality) ஆரிய தேசிய இனம் என்றே இந்து ஆங்கில நாளிதழ் எழுதியது.
இந்து, இந்தியா ஆகிய இரண்டு சொற்களும் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்களாகும். 1930களில் இந்து என்ற சொல் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் அல்லாத உள்நாட்டுக்காரர்களைக் குறிக்கும் சொல்லாகக் கருதப்பட்டது. Hindu Literary Society என்ற பெயரில் சென்னையில் தொடங்கப்பெற்ற கல்வி சங்கம் இப்படித்தான் இந்தச் சொல்லை வழங்கியது. பார்ப்பனரல்லாதவர்கள் (தமிழர்கள்) இந்தச் சொல்லை வடமொழி வேதத்தை ஏற்றுக் கொண்ட மக்களைக் குறிக்கும். சொல்லாக அப்பொழுது கருதவில்லை. 1917 (ஜூன் 1ஆம்நாள்) வெளியிடப் பெற்ற திராவிடன் முதல் இதழ் 'பிராமணரல்லாத இதர் இந்துக்களுடைய குறைகள்' என்றுதான் எழுதியது.
1898க்குள் இந்து என்ற சொல்லைத் தன் பெயரில் கொண்ட 15 தமிழ் இதழ்கள், (பத்திரிகைகள்) வெளிவந்துள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை பார்ப்பனர் அல்லாதாராலேயே நடத்தப் பெற்று வந்துள்ளன. 1888 சனவரியில் இந்து ஜன சம்ஸ்காரிணி என்ற இதழ் 'அரசாங்க வேலைகளில் பிராமணர்கள் நிறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு மக்கள் தொகை விகிதப்படியே அரசாங்க வேலைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறது.
இதே காலப்பகுதியில் திராவிடம் என்ற சொல்லை தன் பெயரில் கொண்ட இதழ்கள் (பத்திரிகைகள்) 13 இவை எவற்றிலும் பார்ப்பனர்கள் தொடர்புடையவராக காணப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/59&oldid=1690761" இலிருந்து மீள்விக்கப்பட்டது