பக்கம்:இந்து தேசியம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 'இந்து' தேசியம்

வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அதற்கு இங்குள்ள தினமணி, தினமலர் போன்றவை நல்ல சேவை செய்து வருகின்றன. குறிப்பாக. தினமணி நாளிதழில் 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆர்.எஸ்.என்.சத்யா, இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் பார்ப்பனியக் கருத்துரைகளும் அவற்றை மறுத்துப் பார்ப்பனிய எதிர்ப்புணர்வுடன் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோர் எழுதிய மறுப்புரைகளும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன. இக்கடிதங்களைத் தொகுத்து, 'திராவிடத் தினமணியின் பார்ப்பனியம்' என்ற பெயரில் எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் ஒரு நூலாகவே வெளியிட்டுள்ளனர். (1992 மார்ச்). இவர்களே 1996இல் வெளியிட்ட ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்' என்ற நூலும் தமிழர்கள் வாசிக்க வேண்டிய நூலாகும்.
இன்று தமிழ்நாட்டில் உருவாகியுள்ள சூழ்நிலைகளைச் சற்றுப் பொறுமையுடன் கணித்தறிய வேண்டும். கிறித்தவரல்லாத, இசுலாமியரல்லாத அனைத்து மக்களுக்கும் 'நான்தான் ஆன்மீகத் தலைவர்' என்று காஞ்சி சங்கராச்சாரியார் எழுதப்படாத அதிகாரம் ஒன்றைத் தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளார். இராமகோபாலன் போன்ற இந்து வெறியர்கள் சிலரும், ஏமாந்து போன ராமகிருஷ்ண மடத்து வேதாந்திகள் சிலரும் வலுத்த குரலில் அதை வழிமொழிந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். செய்தியாளர்கள் பொதுநியாயம் பேசுவது போலக் காட்டிக் கொண்டு சங்கராச்சாரியாருக்கு ஆலவட்டம் வீசுகின்றனர். எழுத்துலக மேதை சோ, அவரைச் சார்ந்த முன்னாள்கள் பலர் திரைமறைவு எழுத்துக்களால் பார்ப்பனிய மேலாண்மையினைத் தக்க வைக்க முயலுகின்றார்கள். சங்கர மடத்தின் அதிகாரப் பிற்புலத்தை நினைத்து சைவ, வைணவ மடாதிபதிகளோ பேச்சு மூச்சற்றுப் போய்க் கிடக்கின்றார்கள். பார்ப்பனர் நலன் காக்கும் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற அமைப்புகளும் ஓரளவு தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகின்றன. 1980க்குப் பின் தோன்றிய அரசியல் கட்சியான பா.ம.க. பெரியாரின் கொள்கைகளை வலிமையோடு முன்வைத்தது. எங்கள கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்க்க மாட்டோம்' என்று வெளிப்படையாகச் சொல்லியது. ஆனால் அது இந்த நிலைப்பாட்டை 1980 தேர்தலில் சட்ட மன்றத்திற்குள் ஒரு உறுப்பினரை அனுப்பிவிட்டது எடுப்பதற்கு முன்னரே பார்ப்பனியத்திற்கு அரணான இந்து முன்னணி (குமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதி). அண்மையில் தோன்றியுள்ள தலித் அமைப்புகளில் புதிய தமிழகம் அமைப்பும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் பார்ப்பனிய எதிர்ப்பினை வெளிப்படையாக முன் வைக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/77&oldid=1708724" இலிருந்து மீள்விக்கப்பட்டது