84 'இந்து' தேசியம்
கைவசப் படுத்தினர். அப்போதுதான் வளரத் தொடங்கியிருந்த தமிழ்ப் பத்திரிகைத் துறையில் புகுந்தனர் இந்துமதம் என்ற போர்வையில் ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் சனாதன தர்மத்தைப் பத்திரிகையின் வாயிலாக வளர்க்கத் தொடங்கினர். அப்போது மெதுவாகக் கிளர்ந்து கொண்டிருந்த தேசிய இயக்கத்தையும் தம்வசப்படுத்தினர். தமிழ் நாவலாசிரியரான வத்தலக்குண்டு ராஜமையர். (Rambles of Vedanta) என்ற புகழ் பெற்ற ஆங்கில நூலை எழுதியதும் இக்காலத்தில்தான். சுதேசமித்திரன் இதே காலத்தில் சனாதன தர்மத்தினைப் பாதுகாக்க மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டது. சனாதன தர்மத்தின் வெளிப்பாடான The Hindu என்ற பெயரே பார்ப்பனர்கள் நடத்திய ஆங்கிலப் பத்திரிகைக்கு இடப்பட்டது,
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பிற பகுதிகளிலும் இந்திய தேசிய எழுச்சியை இந்து மறுமலர்ச்சி இயக்க எழுச்சியாகக் காட்ட முயற்சிகள் நடந்தன. மராட்டியத்தின் திலகரும் வங்காளத்தின் அரவிந்தரும் தமிழ்நாட்டு ராஜமையரும் பேசிய தத்துவம் வேதாந்தமே. ஆக மொத்தத்தில், இந்திய தேசியத்திற்கு முன்னே பார்ப்பனர்களே வேதாந்தப்பதாகை பிடித்து வந்தனர் என்பது வரலாற்று உண்மை. மராட்டிய சிங்கம் எனப்பட்ட திலகர் கீதைக்கு உரை (கீதாபாஷ்யம்) எழுதியபிறகுதான் உயர்சாதி மக்கள் ஏற்றுக் கொண்ட தலைவரானார். தேசிய எழுச்சிக்கான பண்பாட்டு உத்திகளாகப் பவானி பூசையினையும் விநாயகர் வழிபாட்டையும் அவர் முன் வைத்தார். விநாயக சதுர்த்தி அரசியல் ஆனதற்கு அவரே முதற்காரணம். இதன் பின் விளைவாகவே 1923இல் இந்து மகாசபை வேத காலத்திற்குத் திரும்புதல் என்று தன கொள்கையை வெளிப்படையாகவே முன் வைத்து 1925இல் ஆர்.எஸ். எஸ்.தொடங்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டு தொடங்குகிற நேரத்தில் நீதித்துறையும் வருவாய்த்துறையும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக் கல்வித் துறையும் பார்ப்பனர்களின் வசமாகிவிட்டது. அக்காலத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பட்டதாரிகளில் 80% அவர்களின் மூலம் சென்னை ஆளுநரின் ஆலோசனை சபைக்குத் பார்ப்பனர்களாக இருந்தனர். தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினரும் பார்ப்பனராகத்தான் இருக்க முடியும் என்ற நிலை உருவானது. நவீன விஞ்ஞானத் துறையிலும் அரசியல் துறையிலும் புகுந்த அதே நேரத்தில் தங்கள் கைவசம் இருந்த அதிகாரத்தைக் கொண்டு பார்ப்பனர்கள் சனாதன தர்மத்தையும் தக்க வைத்துக் கொண்டனர். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அரசாங்க மானியத்தில் சமஸ்கிருதம் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும்