தொ.பரமசிவன் 85
என்னும் அரசாங்க விதி 1921இல் நீதிக்கட்சி அரசின் முதல் அமைச்சர் ஆன பனகல் அரசர் (சென்னைப் பல்கலைக்கழகத்தில்) மசோதா கொண்டு வந்து மருத்துவக் கல்லூரிகளில் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நீக்கினார். (ஆதாரம்:1985 பெரியார் பக்.107) இந்தக் காலத் தமிழ் இளைஞர்கள் இதைக் நாட்குறிப்பு, கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.
இந்த விதிமுறையின் விளைவாகப் பணமும் அதிகாரமும் சமூக கௌரவமும் தரும் ஆங்கில மருத்துவப் படிப்பு, சட்டப்படிப்பு, பொறியியற் படிப்பு ஆகிய கல்வித் துறைகளில் பார்ப்பனர்களே பேராதிக்கம் செலுத்தினர். இவையல்லாத பொதுக்கல்வியிலும் உயர்கல்வி என்பது பார்ப்பனர்களுக்கு உரியதாக இருந்தது. தமிழ்நாட்டில் அன்று இருந்த ஒரே பல்கலைக் கழகமான சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் 1880-1911இல் 64% ஆகவும், 1890- 91இல் 67% ஆகவும், 1901-1911இல் 71% ஆகவும், 1918இல் 67% ஆகவும் பார்ப்பனர்களே இருந்தனர்.
அடிப்படைக் கல்வியிலும் பார்ப்பனர்கள் அதன் போக்கைத் தங்களுக்குச் சாதகமாக அமையும்படி தீர்மானித்தார்கள். பார்ப்பனர்களின் வேதக் கல்வி என்பது முழுக்க முழுக்க மனப்பாடம் சார்ந்த கல்வியாகும். மனப்பாடப் பயிற்சி எழுத்தறிவில்லாத மற்ற சாதியார்க்குக் குறைவே. மெக்காலே கல்வியின் அடிப்படையில் நன்றாக மனப்பாடம் செய்யும் மாணவனே நிறைய மதிப்பெண் பெற்று, சிறந்த மாணவன் ஆகிவிடுவான். எனவே பரம்பரையாக மனப்பாடப் பயிற்சி உடைய பார்ப்பன மாணவர்கள் சிறந்த மாணவர்களாக வெற்றி பெறுவது தவிர்க்க முடியாததாகிவிடும் (கல்வித் துறையில் இக்குறைபாடு இன்றளவும் களையப்படாதது வேதனைக்குரிய செய்தியாகும்)
இதன் பின் விளைவாக வருவாய்த் துறையிலும், நீதித்துறையிலும், பார்ப்பனர்கள் தொடர்ந்து மேலாதிக்கம் பெற முடிந்தது. 1912 இல் சென்னை மாகாணத்தில் 140 டெபுடி கலெக்டர்களில் (மாவட்டத் துணை ஆட்சித் தலைவர்) 77 பேர் பார்ப்பனர்களாக இருந்தனர். 18 துணை நீதிபதிகளில் (சப் ஜட்ஜ்களில்) 15 பேர் பார்ப்பனர்கள். 129 உரிமையியல் நீதிமன்ற நடுவர்களில்(முன்சீப்புகளில்) 93 பேர் பார்ப்பனர்கள்.
இதே நேரத்தில் பார்ப்பனர்கள் மற்றும் ஒரு போக்கையும் திட்டமிட்டு மேற்கொண்டனர். பார்ப்பனர் கையில் இருந்த பெருங்கோயில்களுக்கும் கோயில் பார்ப்பனர்களுக்கும் கோயில் கலாச்சாரத்திற்கும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதி முதலே அரசாங்க ஆதரவு வரலாற்றில் முதல்முறையாக இல்லாமல்