________________
8 'இந்து' தேசியம்
'இந்து' என்ற சொல்லின் பொருள் பற்றியும் பெரியார் பல வாய்ப்புகளில் கூறியுள்ளார். 1927 ஆம் ஆண்டு சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத வாலிபர் சங்கச் கூட்டத்தில் பெரியார் ஜாதி ஒழிப்பைப் பற்றிப் பேசும்போது, ஜாதி என்பது தமிழ்ச் சொல்லல்ல; ஜாதிக்கு ஆதாரமான இந்து மதம் என்பதும் தமிழ்ச் சொல்லல்ல என்றெல்லாம் கூறியதன் தொடர்ச்சியாக, இந்து என்ற சொல்லைப் பற்றிக் கூறும் போது "ஆராய்ச்சிக்காரர்கள் அதை ஒரு நதியின் பெயர் என்கிறார்கள். சிலர் ஒரு இடத்தில் வாழும் குறிப்பிட்ட மனிதர்களைக் குறிக்கும் சொல் என்கிறார்கள். சிலர் பர்சிய பாஷையில் திருடர்களைக் குறிப்பது என்கிறார்கள்” (குடிஅரசு 30-10- 1927) என்று பொருள் விளக்கம் தந்துள்ளார்.
'அந்த 'இந்து' என்ற சொல் குறித்து வேறு சில அறிஞர்கள் கூறியிருப்பவை சிலவற்றைக் காண்பது பொருத்தமாக இருக்கும்.
"பாரசீக இலக்கியங்களில் ஹிண்டு-இ-ஃபலக் (Hindu - e Falak) என்றால் வானத்தின் கருப்பு அதாவது சனி என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. இந்த புனித மண்ணில் கால் வைத்த பாரசீகர்கள் இந்த மண்ணில் பரவி வாழ்ந்து வந்த இந்நாட்டு மக்களைப் பார்த்து இழித்துக் கூறிய அந்த 'இந்து' என்ற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவது மிகவும் இழிவான ஒன்றாகும் (R.N.Surya Narayan, UNIVERSAL RELIGION Page 1-2, Published from Mysore in 1952)”
̆
"பல பேர் இந்து என்பது சிந்து என்பதன் சிதைந்த வடிவம் என்கிறார்கள். இது தவறு. சிந்து என்பது ஒரு ஆறே தவிர அது மக்கள் குழு அல்ல. நாட்டை ஆக்கிரமித்த இஸ்லாமியர்கள் இப்பகுதியில் வாழும் ஆரிய மரபினரை கேவலப்படுத்தவே அச்சொல்லைப் பயன்படுத்தினர். பாரசீக மொழியில் இந்து என்றால் அடிமை, அஞ்ஞானி என்றே பொருள். இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றாதவர்களை அப்படி அழைப்பது வழக்கம் என்கிறார் நமது ஆசிரியர் (Maharishi Shri Dayaanand Saraswati Aur Unkaa Kaam; "Ed- ited by Lala Lajpat Rai, Published from Lahore in 1898, in the Chapter of Indroduction)"
“மேலும் 1964இல் லக்னோவில் இருந்து வெளியிடப்பட்டுள்ள Lughet-e-Kishwari என்ற தலைப்பிடப்பட்டுள்ள பாரசீக அகராதியில் இந்து (Hindu) என்பதற்கு திருடன் (chore - Thief) கொள்ளைக்காரன் (dakoo-Dacoit) வழிப்பறி செய்பவன் (raahzvan - Waylayer) அடிமை (ghulam – Slave) என்று பொருள்கள் கூறப்பட்டுள்ளன".
அது போலவே “Urdu- Feroze-ul-Laghat என்ற தலைப்பிட்ட மற்றொரு அகராதியில் (முதல் பாகம் என்ற சொல்லுக்குக் கீழ்கண்டவாறு - பக்கம். 615) இந்து (Hindu) என்ற சொல்லுக்குக் கீழ்கண்டவாறு பொருள்கள் கூறப்பட்டுள்ளன.