________________
தொ.பரமசிவன் 93 ராஜாஜி திருமலை நல்லான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) சேலம் மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தில் வடகலை வைணவக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வழக்கறிஞராக சேலத்தில் வாழ்க்கையைத் தொடங்கி முன்னுக்கு வந்தவர். கூர்த்த மதிநுட்பமும் திட்டமான வாழ்க்கை நெறிகளும் உடையவர். இதனை முழுக்க பார்ப்பனர் நலனுக்காகப் பயன்படுத்தினார். 40 வயதிற்குள்ளாகவே சேலம் நகர சபைத் தலைவரானார். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு 55 ஆண்டு காலமாக இராஜாஜி. பெரியார் ஈ.வெ.ரா. என்ற இரண்டு எதிர்த் துருவங்களையே சுற்றி வந்திருக்கின்றது. 'தேவர்களுக்கு மகாவிஷ்ணு மாதிரி பார்ப்பனர்களுக்கு ராஜாஜி' என்று பெரியார் இவரை வர்ணித்ததுண்டு. தமிழ்நாட்டு வரலாற்றில் இறுதி மூச்சு வரை பார்ப்பனியத்தின் நலன்களை வலிமையான, புதிய புதிய பாதுகாப்பு அரண்களோடு காப்பாற்றப் போராடியவர் ராஜாஜியைத் தவிர வேறு யாருமில்லை. - 1919-இல் சென்னைக்குக் குடிபெயர்ந்தார் ராஜாஜி. அப்பொழுது காங்கிரஸ் குழுக்கள்- நாட்டிலிருந்த காங்கிரஸ் குழுக்கள் எவற்றிலும் காந்திக்கோ, சர்.சி.பி.ராமசாமி ஐயர் செல்வாக்கில்லை. காந்தியத்துக்கோ தலைமையிலிருந்த குழு காங்கிரசை விடக் கவர்னரை நேசித்தது. மற்றொரு குழுவான தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச மறுப்பு ஐயங்காரும் செயலாளர் எஸ்.சத்தியமூர்த்தியும் சட்ட இயக்கத்தையும், காந்தியத்தையும் எதிர்த்தனர். குழுக்கள் எதிலும் சிக்கிக் கொள்ளாத (ஆனால் மயிலாப்பூர் சனாதனத்தை விரும்பிய) ராஜாஜி அக்காலத்தில் வலிமை வாய்ந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்த, தேசபக்தன் பத்திரிகை நடத்திய திரு.வி.கல்யாண சுந்தர முதலியாரைத் தன் பக்கம் இழுத்தார். பின்னர் பார்ப்பனரல்லாதாரான பெரியார், எஸ்.ராமநாதன், டாக்டர்.பி.வரதராஜுலு நாயுடு ஆகியோரை முன்னிறுத்தி (இவர்கள் மூவருமே பின்னாளில் ராஜாஜியையும் பார்ப்பனியத்தையும் எதிர்த்துத் திராவிடர் இயக்கத் தூண்களாயினர்) தன்னுடைய பார்ப்பன எதிரிகளை அரசியலில் வீழ்த்திக் காட்டினார். வ.வே.சு. ஐயர் நடத்திய சேரன்மகாதேவி குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்குத் தனி உணவு, உறைவிடம், நீர் ஆகியவையும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்குத் தனியான உணவு, உடை, நீர் எனவும் பாகுபாடு காட்டப்பட்டது. இதனைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போது செங்கல்பட்டு எம்.கே.ஆச்சாரியா, கே.சந்தானம் தன்னுடன் சேர்த்துக் கொண்டு (ஐயங்கார்) இருவரையும் ராஜாஜி தனி booksworld”