பக்கம்:இனிக்கும் பாடல்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கு சக்கரச் சாமி

சங்கு சக்கரச் சாமியாம் :
சாய்ந்து படுத்துக் கிடக்குமாம் :
எங்கே, எங்கே, தெரியுமா?
எங்கள் ஊருக் கோயிலில்.

நீட்டிப் படுத்துக் கிடக்குமாம் :
நீல வண்ணச் சாமியைப்
பாட்டுப் பாடி எழுப்பலாம்.
கூட்ட மாக வாருங்கள்.

16