பக்கம்:இனிக்கும் பாடல்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


தெரியுமா தம்பி ?


நெட்டை யான காலுடனே
நீள மான கழுத்துடனே
சுட்டுப் பொசுக்கும் மணலில் கூடச்
சுமையைத் தூக்கிச் செல்லும் அது
என்ன தெரியுமா ?-தம்பி
என்ன தெரியுமா ?

முறத்தைப் போன்ற காதுடனே -
முகத்தில் ஒற்றைக் கையுடனே
உரலைப் போன்ற காலுடனே
ஊர்வ லத்தில் வருமே அது
என்ன தெரியுமா ? தம்பி
என்ன தெரியுமா ?

19