பக்கம்:இனிக்கும் பாடல்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குழந்தைக் கவிஞர்
வள்ளியப்பா

• 'குழந்தைக் கவிஞர்' என அன்போடு அழைக்கப்படுபவர்.

• 'பிள்ளைக் கவியரசு' என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்.

• 50-க்கு மேற்பட்ட குழந்தைப் புத்தகங்களை எழுதியவர்; இவற்றில் 2 புத்தகங்களுக்கு இந்திய அரசினரும், 6 புத்தகங்களுக்குத் தமிழக அரசினரும் பரிசுகள் வழங்கியுள்ளனர்.

• 1950-ல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவிப் பல நல்ல குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கியவர்.

• ஜனதிபதி டாக்டர் ஜாகிர் ஹாசேன், ஜனதிபதி பக்ருதீன் அலி அகமது-இருவராலும் கேடயங்கள் வழங்கிக் கெளரவிக்கப் பெற்றவர்.

• கவிமணி, காமக்கல் கவிஞர், ராஜாஜி, கல்கி, டாக்டர் சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வ. போன்ற அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.