பக்கம்:இனிக்கும் பாடல்கள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பால முருகன்


சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்


வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்