பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எங்கள் தம்பி நல்ல தம்பி!
எங்கள் தம்பி தங்கக் கம்பி!

காலைக் கையை ஆட்டிக் கொண்டு,
கழுத்தில் பையை மாட்டிக் கொண்டு,
கோலைக் கையில் எடுத்துக் கொண்டு
குலுங்கக் குலுங்கச் சிரிக்கும் தம்பி!

நாயின் மேலே ஏறிக் கொள்வான்;
நடக்கச் சொல்லி அடிஅ டிப்பான்;
தாயைப் போலக் காலை நீட்டித்
தடுக்குக் குழந்தை எடுக்கச் சொல்வான்