பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சின்னத் தம்பி சிரிப்பைப் போலச்
செடியில் முல்லை பூத்ததே!-வீட்டுச்
செடியில் முல்லை பூத்ததே!


சின்ன அக்கா சிரிப்பைப் போலச்
செந்தா மரையும் பூத்ததே!-குளச்
செந்தா மரையும் பூத்ததே!


அம்மா சிரிக்கும் சிரிப்பைப் போல
அல்லி மலரும் பூத்ததே!-செவ்
வல்லி மலரும் பூத்ததே!