பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழிலைக் கற்போம்



தொழிலைக் கற்போமே ! -கைத்
தொழிலைக் கற்போமே !

அழகுப் பூக்கள் பின்னலாம் ;
ஆடை தைக்கக் கற்கலாம் ;
உழவுத் தொழிலைச் செய்யலாம் ;
ஒவி யங்கள் தீட்டலாம் !

கத்த ரிக்கப் பழகலாம் ;
காகி தப்பூச் செய்யலாம் ;
முத்து மாலை கோக்கலாம் ;
முல்லைப் பூக்கள் தொடுக்கலாம் !

46